பக்கம்:விஷக்கோப்பை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

81


சி. பி. சிற்றரசு 81 எடுத்துரைத்தான். மெலிடசும், அவனது நண்பர் களும் தன்மேல் சுமத்திய குற்றங்களுக்கெல்லாம் ஆணித்தரமாகப் பதிலளித்தான். அந்த நீதிமன்றம் தனக்களித்த, மரண தண்டனையை, மாற்ருரின் வாளை மார்பில் தாங்கும் வீரனைப்போல், தாங்கி வெளியே வந்தான். இன்று உயிருக்கே பயந்து சிறையிலிருந்து தப்பித்தோடி மக்கள் நடமாட்டமில்லாத கானகங் களில் வேடுவர்களுக்குப் பயந்து தி ரி யு ம் விலங்கு போலத் திரிகின்ருன். சட்டங்களை எதிர்த்துப் போராடினன். அந்த சட்டங்கள் தன்னை அடை யாளங் கண்டுகொள்ளாமலிருக்க உருமாறித் திரிகின் ருன் என்று ஏளனஞ் செய்யும். அந்த சட்டங்களின் அதிகார வரம்புக்கப்பாற் பட்ட அயல் நாடுகளுக்குச் சென்றுவிடுகிறேன் என்று வைத்துக்கொள். அங்கும் வல்லுாருக்குப் ப ய ந் து திரியும் ஒரு புருவின் நிம்மதியைக்கூட நான் அடைய முடியாதே. அங்கும் பகைவர்கள் படையெடுப் பார்கள். அரசாங்க ஒற்றர்கள் திரிவார்கள். அந்த நாட்டில் நான் இருவகைக் குற்றவாளி. ஒன்று:சிறைச்சாலையிலிருந்து தப்பித்தோடிய குற்றவாளி. மற்ருென்று:-தன் தாய் நாட்டால் தண்டிக்கப் பட்டுத் தண்டனையை ஏற்க பயந்து அயல் நாட்டில் தலைமறைவாய்த் திரியும் குற்றவாளி. ஒரு சமயம் நான் அங்கே பகிரங்கமாகத் திரிகிறேன் எ ன் று வைத்துக்கொள். என்னைத் தன் நாட்டுக்கு அனுப்பும் படி இந்த அரசாங்கம் கேட்கும். அந்த நாட்டுக்கு என்மேல் இருக்கும் அன்பினலோ, போகட்டும் ஒரு வி-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/86&oldid=1331469" இலிருந்து மீள்விக்கப்பட்டது