உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

விஷக்கோப்பை


86 விஷக்கோப்பை

கிரிடோ: ஆமாம். தாராளமாகச் சொல்ல லாம். சாக் எதை அறத்தைப்பற்றியா? கிரிடோ : ஆமாம். சாக் : (சிரித்துக்கொண்டே) நமது நாட்டின் அறம் சரி இல்லை என்று சொல்ல வேண்டுமல்லவா? கிரிடோ : ஆமாம். அப்படித் தா ன் செய்ய வேண்டும். சாக் : அறம் வழுவிய ஒரு நாட்டின் பிறந்த குடிமகன் ஒருவனுக்குள்ள கடமை என்ன? நாட்டை விட்டே ஓடிவிடுவதா அல்லது வழுவிய அறத்தை நேர்படுத்துவதா. அறம் சரி இல்லை என்பதற்காக நானும் நீயும் மற்றெல்லோரும் பிறந்த நாட்டை விட்டு ஓடி விடுகிருேம் என்று வைத்துக்கொள். அதன் பிறகு இந்த மண்ணுக்கு நாடென்று பெயரா? காடென்று பெயரா? கிரிடோ : (மெளனம்) சாக் வேறு எந்த நாட்டுக்குப் போனலும் நாம் அந்த நாட்டின் குடிகளா அல்லது அயல் நாட்டாரா? சரி, உன் விருப்பப்படி போய்விடு கிறேன் என்று வைத்துக் கொள்வோம், அங்கே என்ன பேச முடியும், அறத்தைப் பற்றியா, நீதியைப் பற்றியா, நேர்மையைப் பற்றியா எதைப்பற்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/91&oldid=1331474" இலிருந்து மீள்விக்கப்பட்டது