பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வீர சுதந்திரம் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் மெக்சிகன் கெளபாய் உடையில் வந்து) ராய்: பாவம் பரிதாபம். அமெரிக்க மண்ணிலே ஒரு அனுதை இந்தியர் சுதந்திர பூமியிலே ஒரு அடிமை யின் அவலக் குரல்! விதியின் கோரக் கைகளில் அகப்பட்டுத் தவிக்கிறது. ஒரு வயதான உயிர் (லஜபதியை அணுகி) பாரதவீரர்கள் போற்றும் பாஞ்சால சிங்கமே! பஞ்சைக் குழந்தைபோல் தவிப்பது ஏனய்யா? ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் இந்தியச் சிங்கமே ஏனிந்தக் கண்ணிர்? லாலா : யாரப்பா நீ? ராய் : நான்.கான் ஒரு மெக்ஸிகோ காட்டு வாலிபன். அமெரிக்க இடது சாரிகளில் ஒருவன் தங்களைப் பார் த் தா ல் பரிதாபமாயிருக்கிறது; தங்கள் தண்டனைக்குக் காரணம் என்ன? (லஜபதியின் சக் தேகப் பார்வையைக் கண்டு) அஞ்ச வேண்டாம். கான் ஆங்கில ஒற்றன் அல்ல. எ ன்னை நீர் கம்பலாம். லாலா : உம், என் மக்களின் துயர் தீர்க்கப்பாடு பட்டேன். ராய் : ...துயரக் கடலில் நீரே விழுந்து விட்டீர். வேண்டு மய்யா உமக்கு, கன்ருக வேண்டும். தேவப்பிறவி யான வெள்ளையனே எதிர்த்தது குற்றந்தான். நீர் இந்தத் தண்டனையை அனுபவிப்பது நியாயந்தான். லாலா : தம்பி ,ே என்ன சொல்கிருய்? ராய் : அடிமையான பாரத மக்களுக்கு சுதந்திரம் ஒரு கேடா என் று கேட்கிறேன்: - --