உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வெறுந்தாள் இருந்த்து. இப்பொழுது அச்சு எவ்வளவு வேகமாக முன் னேறி இருக்கிறது. அதற்கு ஒவியம் முகப்பை அழகு செய் தது. நடைபாதைச் சித்திரம். அங்கே ஒரு பிளாட்பாரம்' அதுதான் கண்ணகிக்கு எதிரே புரட்சி செய்யும் அவள் சித்திரம் தீட்டப்பட்டிருந்தது. அவளை ஒரு இளைஞன் கைப்பிடித்து இழுக்கிறான். மற்றொரு கையில் பத்து ரூபாய் நோட்டை அவளிடம் தருகிறான். 'பெண்ணே நீ வாழ்க' என்பது அந்தக் கவிதை களின் தொகுப்பு. இன்று பெண்கள் எவ்வளவு சீரழிகிறார்கள் என்பதை அவன் புதிய கவிதைகள் படம் பிடித்துக் காட்டின. இந்த இலக்கிய வட்டத்தில் அவன் ஒருவன்தான் உருப்படியாக ஒரு நூலைக் கொணர்ந்திருந்தான். அதைப் படிக்கும் பொழுது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. இத்தகைய புதுக் கவிஞர்களால்தான் இந்தச் சமுதாயம் புத் துணர்வு பெறப் போகிறது என்று மகிழ்ந்தேன். புரட்சி மிக்க கருத்துகளை அவர்கள் இந்தப் புதுக் கவியில் தீட்டித் தருகிறார்கள். இந்த எழுத்துகள் தாம் இனி வாழப் போகின்றன என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இனி என் பத்திரிகையில் வானம்பாடியின் கவிதைகள் தான் இடம் பெறப் போகின்றன என்பதில் மகிழ்ச்சி கொண்டேன. எதிர்பாராத விதமாக வானம்பாடி என் அறைக்கு வந் தான். இலக்கிய வட்டம் அரை வட்டமாகக் காட்சி அளித் தது. கொஞ்சம் நேரத்திற்கெல்லாம் டாக்டர் ஒரு பத்திரிகை கொண்டு வந்தார். குழந்தையைத் தொட்டிலில் இட்டு ஆட்டப் போகிறார்களாம். அதற்கு ஒரு தனி பத்திரிகை. சம்பிரதாயப் படிகளில் அது முதற்படி. அந்தக் குழந்தை ஆடி அசையப் போகிறது. அதற்கு எங்கள் இருவரையும் அழைக்க வந்திருந்தார். பூவையும் பிஞ்சையும் பற்றிப் பேசிய என் அஞ்சுகத்தைக் அழைக்க விரும்பினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/101&oldid=914499" இலிருந்து மீள்விக்கப்பட்டது