உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 17 நான் ஆரம்பத்திலேயே உங்களுக்குச் சொல்லி இருக்க வேண்டும். நான் ஒரு இலக்கியப் பத்திரிகையில் ஆசிரியராகப் பணி செய்கிறேன் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். அங்கே வருவது எல்லாம் சாதாரண கதைகள். அதாவது அவர்கள் சொந்த வாழ்க்கையில் ரசித்தவற்றை ஒரு வடிவம் கொடுத்துக் கதை என்று அனுப்பிவிடுவார்கள். அது சரி. கதை என்பது வேறு என்ன அவ்வளவுதானே. ஆனால் என்னமோ அதைப் பார்த்துப் பார்த்துச் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. நான் எப்பொழுதோ ஒரு தொடர்கதை எழுதி அனுப்பி இருந்தேன். அதில் என் சொந்த அனுபவங்களை வைத்துக் கதை எழுதியிருந்தேன். கலியாணம் ஆவதற்கு முன் ஏற்பட்ட அனுபவங்கள். அதற்கப்புறம் எந்த அனுபவம் கிடைக்கிறது. அவள் எனக்குக் கிடைக்கவில்லை. அதை நினைத்து நினைத்தே அந்தக் கதையை எழுதி முடித்தேன். 'ஏக்கம்' என்பதுதான் அந்தக் கதையின் தலைப்பு. அதற்குப் பரிசு கூடக் கொடுத்தார்கள். பரிசு பெற்றுவிட்ட தாலேயே நான் ஒர் எழுத்தாளன் என்று எப்படிச் சொல்ல முடியும். ஏதோ ஒரு முறை ஒரு கதை எழுதிவிடலாம். தொடர்ந்து எழுதினால்தானே எழுத்தாளன் என்று கூற முடியும். அந்தக் கதைக்கே அந்தப்பத்திரிகை ஆசிரியர் பாராட்டிவிட்டார். 'உங்களைப் போன்ற இளம் எழுத் தாளர்கள் நிறைய எழுத வேண்டும்” என்று தட்டிக் கொடுத் தார். இப்பொழுது நினைக்கிறேன். அவர் பத்திரிகை. அது ஆரம்பநிலை. அதில் நிலைத்துப் பணி செய்ய ஆள்யாரும் இல்லை. அதற்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. நான் எழுதிய அந்தக் கதை எப்படியோ கொஞ்சம் சிறப்பாக அமைந்து விட்டது அது உண்மைதானே. எழுத்தாளனுக்கு வேண்டிய அமிசம் என்னிடம் ஒன்றும் இல்லை. பேனா இருந்தது; அதில் மசியும் இருந்தது. கருத்துகள் பஞ்சம். நான் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/18&oldid=914520" இலிருந்து மீள்விக்கப்பட்டது