பக்கம்:வெறுந்தாள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வெறுந்தாள் தெரியும். அதன் ஒளி தெரியாது என்று கூறுகிறார்கள். சான்றோர்களுக்கு மாசு ஏற்பட்டால் அந்த மாசுதான் மற்றவர்களுக்குத் தெரியும். அதையே பெரிதாகப் பேசு வார்கள். அதைப் போன்றவர் தான் என் கணவர். என் விதவைத் தனத்தை அவர் அப்பொழுது தன்னையும் அறியாமல் குத்திப் பேசுவார். அவரால் வெளிச்சத்தைக் காண முடியவில்லை. குறையைத் தான் காண முடிகிறது என்று சொன்னாள். எனக்கு என்னமோ அந்த நிலையில் அவர்கள் வீட்டில் மாட்டப்பட்டிருந்த பழைய தலைவர்கள் படம் கவனத்தை இழுத்தது. அவர்களைப் பற்றிய விமரிசனமும் அப்படித்தானே என்று நினைக்கத் தோன்றி யது. அதற்குமேல் சென்றால் அது அரசியல் ஆகிவிடும் என்பதால் அதைப் பற்றி எங்கள் இலக்கிய விமரிசனத்தில் பேச விரும்பவில்லை. உலகத்தில் ஒரு பொருளைப் பற்றி ஆராயும் பொழுது அதில் குறைகளையும் காணலாம். ஆனால் அது தந்த வெளிச்சத்தைப் பற்றியும் எண்ணிப் பார்க்க வேண்டும். உலகம் வெளிச்சத்தை வைத்து மதிப்பிடுகிறது. சான்றோர்கள் கண்களுக்குக் குறைதான் தெரிகிறது என்று நினைத்துக் கொண்டேன். அந்த டாக்டர் சான்றோர் வகை யில் சேர்க்க வேண்டிய ஒருவர் என்ற எண்ணம் தோன் றியது. இன்றைய அரசியலும் அப்படித்தானே என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. பத்திரிகை ஆசிரிய னாகப் பணி செய்ததால் அந்த நினைவோட்டம் என்னிடம் எழுந்தது. 'வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு' என்பதைப் பற்றித் தானும் ஒரு சிறு கதை எழுதுவதாகச் சொல்லி இருந்தாள். இது திரைப் படத்துக்கு உரிய தலைப்பாக எனக்குத் தெரிந்தது. யாரும் அப்படி இதுவரை எந்தப் படமும் எடுக்கவில்லை. இனிமேல் எடுக்கலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/35&oldid=914539" இலிருந்து மீள்விக்கப்பட்டது