உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வெறுந்தாள் 'அப்படி என்றால்?” "அவர்களுக்கு விமரிசனம் தெரியும். படைப்புத் தெரியாது'. 'இரண்டுக்கும் வேறுபாடு?' 'உண்டு. படைப்பாளி விமரிசகர் ஆகலாம். விமரிசகர் படைப்பாளி ஆக முடியாது இதுதான் வேறு பாடு' என்று கூறினேன். அதற்குள் அவன் வீடு வந்து சேர்ந்தது. அதாவது நாங்கள் அந்த வீட்டை அடைந்தோம். 'வருகிறேன்' என்றான். அவன் மனத்தில் ஒரு சோர்வு காணப்பட்டது. வெறும் சொல்லடுக்களும் சுவை அடுக்குகளும் சந்த ஒசை களும் கவிதை ஆகாது. உள்ளத்திலே இருந்து கவிதை எழுத வேண்டும். அந்த ஆற்றல் வானம்பாடியிடம் இல்லை. ★ ★ ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/37&oldid=914541" இலிருந்து மீள்விக்கப்பட்டது