பக்கம்:வெறுந்தாள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வெறுந்தாள் இருக்க உதவும். அதை வரவேற்கலாம். இன்னும் பாண்டி யனின் ஆட்சிக் கொடுமையைப் பற்றி விமரிசித்து என்ன பயன்? அதற்குத்தான் அவன் தன் உயிரைப் பரிசாகத் தந்தானே. அறம் பழி வாங்கிவிட்டதே. மறுபடியும் அவனைப் பற்றி விமரிசித்துக் கொண்டு இருப்பது வீண் பொழுது போக்குதான். மக்கள் தரும் வாக்குரிமை மனிதர்களைத் தண்டிக்க அல்ல; முறைமை மாற்ற. பழையதை மக்கள் விமரிசனம் செய்து முடித்துவிட்டார்கள், அதன் விளைவுதானே ஆட்சி மாற்றம். மறுபடியும் தொடர்ந்து விமரிசனங்கள் செய்து கொண்டே இருந்தால் எப்பொழுது படைப்புத் தொடங்கு வது. ரொட்டித் துண்டுகளை எப்பொழுது பங்கிட்டுக் கொடுப்பது; இந்த நினைவுகள் வானம்பாடியோடு பேசிய பேச்சால் நிகழ்ந்த எதிரொலிகள். தெருவில் யாரோ சிலர் ஒழிக. என்றும், வாழ்க என்றும் கத்திக்கொண்டு இருந்தார்கள். அந்தக் கோஷங்கள் கடல் அலைகள் போல் ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தன. அரசியல் அலைகளில் எழும் கொந் தளிப்பு அதன் ஒசை இது என்று நினைத்தேன். அலையோசை என்ற நாவல் கல்கி எழுதியது. அது யாரை எப்படி நினைத்து எழுதி னாரோ தெரியவில்லை. அந்த அலையோசை இன்னும் அடங்கவில்லை. மக்கள் எழுப்பும் குரல் கோஷங்களால் இந்த ஒசையைக் கேட்க முடிந்தது. அலையோசை ஒரு சரித்திர நாவல் என்றால் அவர் காலத்து நிகழ்ச்சிகளை விமரிசனம் செய்தது தானே அந்த நாவல். அது வரலாற்று நாவல்; அதாவது நாட்டில் நடந்து போன போராட்டத்தை எழுத்தோவியமாகத் தருகிறது. அது தேசியப் போராட் டத்தைப் பதிவு செய்த மகா உன்னதமான நாவல். இந்த எண்ணங்களில் அடுத்த வாரம் பிரசுரிக்க வேண்டிய கதைகளைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தேன். மறுபடியும் ஏன் அந்த 'வெறுந்தாளை இந்த வாரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/39&oldid=914543" இலிருந்து மீள்விக்கப்பட்டது