உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வெறுந்தாள் 'தொடக்கத்தில் சமுதாயத் தொடர்பு இருக்க வேண் டும். கரு அங்கே இருந்துதான் எடுக்கப்படுகிறது. பிறகு அது தாயின் வயிற்றில் உருப்பெறுகிறது” என்று நான் சொல்ல நினைத்தேன். இவ்வாறு பேசுவது ரொம்பவும் அற்பத்தனமாக இருந்தது. 'கண்ணாமூச்சு என்ன ஆயிற்று' என்று கேட்டேன். 'அது எப்பொழுதும் விளையாட முடியாது” 'அப்படி என்றால்?” 'அன்று கேட்பதற்கு நன்றாக இருந்தது; நினைப் பதற்கு நன்றாக இல்லை' என்றாள். "ஏன் கதை ஒடவில்லையா?” 'வெறும்தாள் தான் மிச்சம்' என்றாள். அந்தச் சிறு கதையின் தலைப்பு என்னைக் கவர்ந்தது. வெற்றுத் தாளுக்கும் வெறும்தாளுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்று எண்ணிப்பார்த்தேன். வெற்றுத்தாள் வேறு; வெறும்தாள் வேறு என்று மட்டும் விளங்கியது. ஆனால் வித்தியாசம் தெரியவில்லை. அதை ஏன் எண்ணிக் குழப்பிக் கொள்ளவேண்டும். அதைப்பற்றி எண்ணுவதை விட்டுவிட்டேன். "ஏன் நீங்கள் எழுதவில்லையா?” "எழுத முடியவில்லை' என்று அதே சமயத்தில் வானம்பாடியும் சொல்லிக் கொண்டு வந்தான். புதுக் கவிதையில் இந்தத் தலைப்பு இடம் பெறாது; பெற முடியாது. என்று அடித்துப் பேசினான். 'ஏன் உருவகம் பொருத்தமாக இல்லையா?” 'இந்தக் கருத்துக்கும் காயமே இது பொய்யடா என்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? மனிதனுக்குச் செயல் தன்மையை இழக்கச் செய்யும் கருத்தை நாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/51&oldid=914559" இலிருந்து மீள்விக்கப்பட்டது