உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 63 என்பதுதான் எங்கள் கொள்கை. இந்தச் சங்கிலிகள் எல்லாம் அறுபட வேண்டும்' என்று அவன் பேசினான். சரசுவதியால் சும்மா இருக்க முடியவில்லை. அவ ளுக்குத் தன் கணவன் சொன்னது பொருத்தமாகப்பட்டது. 'மனிதன் கொஞ்சம் சுதந்திரமாக வாழ வேண்டும். கட்டுப் பாடாக வாழ்ந்தால் என்ன பயன்' என்பது அவள் கருத்து. 'இந்தக் காலத்துப் பெண்கள் நிறைய படிக்கிறார்கள். ஆனால் நிறைய பயப்படுகிறார்கள். ஒரு boy friend கூட சினிமாவுக்குப் போவதற்கு அஞ்சுகிறார்கள். 'சோஷியல் ஒபீனியன் அவ்வளவு தூரம் அழுகிப் போய்விட்டது. 'நட் பு என்பதே இந்த நாட்டில் யாரும் அறியாத ஒன்று மேல் நாட்டில் பேனா நண்பர்கள் இருக்கிறார்கள். அதாவது நாம் நினைப்பதை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள நண்பர்கள் வேண்டும். சிறப்பாகப் பெண்களே தங்களுக் குள் கருத்துப் பரிமாறிக் கொள்வதைவிட ஆண்களோடும் சுதந்திரமாகக் கருத்தைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நாம் அறிவுடையவர்களாக முடியும்' என்று பேசினார். அதற்குள் ஞானம் காப்பியை வேலைக்காரியிடம் கொடுத்து அனுப்பினாள். எங்கள் வீட்டில் ஒரு வேலைக்காரி இருந்தாள். அவள் வேலைக்காரியாவதற்கே பிறந்தவள் போல் இருப்பாள். சதா ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பாள். வயது அதிகம்தான் இருந்தாலும் சின்ன பெண் மாதிரி சுறு சுறுப்பாக வேலை செய்வாள். அவள் தான் கொண்டு வந்து வைத்தாள். ஞானத்துக்கு எங்களோடு பேசிப் பழகிப் பழக்கம் இல்லை. அவள் ஜமாவே' வேறு. பட்டுப்புடவை; கலியான பத்திரிகை வைக்க வரும் அலங்காரங்கள், காது குத்தி மயிர் வாங்குவதிலே இருந்து சுடுகாட்டு எல்லைவரை உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/64&oldid=914573" இலிருந்து மீள்விக்கப்பட்டது