உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வெறுந்தாள் சரசுவைக் கூட முகம் பார்த்துப் பேசமாட்டான். சிலருக்கு நேருக்குநேர் முகம் பார்த்துப் பேசும் பழக்கம் இருப்பது இல்லை. எங்கோ கீழே பார்த்துக் கொண்டு பேசுவதைப் பார்க்கிறேன். புதுக்கவிஞருக்குப் பழைய நாணம் அச்சம் குடிகொண்டிருந்ததைக் கவனிக்க முடிந்தது. பொருந்தாத இடத்தில் அவள் இருப்பது போன்று உணர்ந்தாள். டாக்டரைக் கண்டால் ஒரு மரியாதை அவர் மிகப் பெரியவர் என்பதால், சரசுவதியைக் கண்டால் வெறுப்பு, அவள் செய்யத்தகாத காரியத்தைச் செய்து விட்டாள் என்று; வானம்பாடி ஒரு வெட்டிப் பேச்சாளன் என்பது அவள் கணிப்பு. நாங்களும் சடங்குகளுக்கு உள்ளாகி விட்டதைப் போன்ற நிலையில் இருந்தோம். சில சமயம் அந்தப் பேச்சுகளில் சம்பந்தப்பட முடியாதவர்கள் வந்து உட்கார்ந் தால் பேச்சே, தொடர முடியாமல் போகிறது. ஒரு பேச்சு என்றால் அதில் அனைவரும் பங்குகொள்ள வேண்டும்; ஒட்ட முடியாதவர்கள் ஒட்டிக் கொண்டிருந்தால் அவர் களை வெட்டித் தள்ளுவதுதான் சரி என்ற எண்ணம் எழுவது இயல்பு. அது கெட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்? சமுதாயச் சடங்கு என்பது நமக்குப் பிடிக்காதவர்கள் மத்தியில் உட்கார வேண்டும்; பேச வேண்டும் என்பது. எனக்கு ஒன்றும் கஷ்டமாகத் தெரியவில்லை. அவளுக்கு அது ஒரு பெரிய இக்கட்டாக இருந்தது. டாக்டர் சொன்ன சித்தாந்தம் அவளுக்கு எப்படிப் புரியும். இலக்கியவாதிகள் என்றால் ஒழுக்கப் பிரச்சனை யைப் பற்றித்தான் பேசுவார்கள் என்று பேச்சைத் தொடக்கி வைத்தார். எங்களைப் பற்றி இவ்வளவு மட்டமான அபிப் பிராயம் இந்த உலகம் வைத்திருக்கிறது என்பது பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/67&oldid=914576" இலிருந்து மீள்விக்கப்பட்டது