உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 73 சரசுவதிக்காகவே நான் ஒரு முழு எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. "எழுத்தாளன் ஆக வேண்டுமானால் முதலில் உங்கள் பெயரைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வாங்கிய கல்லூரிப் பட்டங்களை மறந்துவிட வேண்டும். பத்திரிகை ஆசிரியர் என்பதைப் போடக் கூடாது. நீங்கள் யார் என்பதை உங்கள் எழுத்தில் விளம்பரப்படுத்தக் கூடாது. சுருக்கமாக ஏதாவது புனை பெயர் வைத்துக் கொள்ளச் சொல்கிறாள். அதாவது அதில் உங்கள் 'சொந்தத்துவம்' இருக்கக் கூடாது' என்று கூறுகிறாள். சிலர் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எழுதத் தொடங்கினால் அந்த நினைப்பு அவர்களை விட்டு அகலாததால் உலகத்துக்கு உபதேசம் செய்து விடுகிறார் கள். அவசியமில்லாமல் திருக்குறளை ஒப்புவிக்கிறார்கள். இல்லாவிட்டால் தாயுமானவரைக் கூப்பிடுகிறார்கள். அல்லது பழந்தமிழ் இலக்கியக் கோட்பாடுகளைப் புகுத்து கிறார்கள். அல்லது சீர்திருத்தம் என்ற பெயரில் மேனாட்டு ஆசிரியர்களை இழுக்கிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார் கள்? அவர்கள் பேராசிரியர் என்ற நினைப்போடு எழுது வதால் தான். அதை முதலில் மறக்க வேண்டும் என்று கூறுகிறாள்; அதைத்தான் அவர் "too much morality' என்ற சொல்லால் குறிப்பிட்டார். அதே கருத்தை அவளும் வழி மொழிந்தாள் அவர்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளில் கருத்து வேறுபட்டாலும் இலக்கியப் பிரச்சனையில் ஒன்றுபட்டு அணுகியது எனக்கு வியப்பாகத்தான் இருந்தது. இலக்கியம் ஒழுக்கப் பிரச்சனையை வாதிக்கக் கூடாது; ஆனால் அதை வற்புறுத்தலாம். அதுதான் எனக்கு ஏற்பட்ட தெளிவு. அதையே மையமாக வைத்து எதையும் எழுதக் கூடாது. சிந்தனைகள் மிக்கு இடம் பெறவேண்டும். பிறரைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும். அதுதான் இலக்கியம் என்ற எண்ணம் அவர்களோடு பேசியதிலிருந்து வெளிப் பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/74&oldid=914584" இலிருந்து மீள்விக்கப்பட்டது