பக்கம்:வெறுந்தாள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 75 உங்களிடத்தில் நல்லது இருக்கிறது. அதை ரசிக்கிறேன். நீங்கள் இந்தச் சமுதாயத்துக்குக் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அந்த ஆற்றல் உங்களிடம் இருக்கிறது. அதைத் தட்டி எழுப்பவே உங்களைச் சந்திக்கிறேன். அதற்காகத் தான் இந்த இலக்கிய வட்டம்' என்று பேசினாள். 'நான் உண்மையில் அவள் அழகை ரசிக்கவில்லை. அந்த உரிமை எனக்கு இல்லை என்பது தெரியும். அது டாக்டருக்குச் சொந்தம். அந்தப் புற அழகு எனக்கு இப்பொழுது தேவை இல்லை. இந்த உலகத்தை அழகு உடையதாக ஆக்க வேண்டும் என்ற துடிப்பு என்னிடம் இருப்பதை உணர்ந்தாள். அதைத்தான் இதுவரை கலை ஞர்கள், எழுத்தாளர்கள் வற்புறுத்தி வந்தார்கள். எங்கோ படித்திருக்கிறேன். அழகு படுத்தாவிட்டாலும் அசிங்கப் படுத்தாதே என்பது பிரபல எழுத்தாளர் ஒருவருடைய கூற்று என்ற நினைக்கிறேன். அந்த லட்சியம் என்னிடம் இடம் பெறவில்லை. ' உலகை அழுகை ஆக்காதே. அதை மகிழவை' என்பது தான் என் எழுத்தின் ஒட்டம் என்பதை அவள் எனக்கு உணர்த்தினாள். 'வெறுந்தாள்' என்ற கதையின் விமரிசனம் அது தானே! அவன் ஏன் வெறுந்தாளைத் தந்தான். வெறுந்தாள் என்ன விடைத்தாள் தான் தரட்டுமே. அது பசித்தாளுக்குச் சோறு போடாது. இந்தக் கல்வித் திட்டம் நாட்டுக்குப் பயன் படாது. படித்த பிறகு அவர்களிடம் தரப்படுகின்ற தாளுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது என்பதுதான் இன்றைய உணர்வு. அந்த வெறுந்தாள் பசித்தாளுக்குச் சோறு போடாது; போடவில்லை என்ற கருத்தையாவது எழுதி வைக்க வேண்டும் என்ற துடிப்பை எனக்கு எழுப்பி யதே அந்த வெறுந்தாள் கதைதானே. அவன் தன் கடமையை உணரவில்லை. சோர்வு அவனை வேதனைக்குள் ஆக்கிவிட்டது. அவனால் படிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/76&oldid=914586" இலிருந்து மீள்விக்கப்பட்டது