பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 ஹயக்கிரீவர் முதலிய அபூர்வ வடிவங்களையும் காணலாம் எல்லாவற்றையும் தூக்கி அடிக்கும் வகையில் நவரங்க மண்டபத் தூண்கள் இருக்கின்றன. இருக்கும் தூண்கள் பன்னிரண்டும், பன்னிரண்டு ராசியைக் குறிக்கின்றன. இதில் அதிசயம் என்னவென்றால், அந்த அந்த ராசியில் சூரியனது கிரணங்கள் அந்த அந்த ராசிக்குரிய தூண்களின் பேரில் விழுவதுதான். கட்டிடக் கலையில் அதி நுட்பமான முறையில் தூண்களும், மண்டபமும் அமைந்திருப்பது: போற்றுதற்குரியதாய் இருக்கிறது. இன்னும் if) oft மண்டபத்தின் வடபக்கத்தில் உருக்கால் செய்யப்பட்ட சனிபகவானின் படிமம் ஒன்றிருக்கிறது. அந்தச் சனி பகவானின் பார்வைக்குத் தப்ப விரும்புபவர்கள் எல்லாம். அவரை எண்ணெய்க் காப்பு செய்து வழிபடுகிறார்கள். இந்த சனிபகவான் பக்கத்திலேயே ஹரிஹரனும் நிற். கிறார். இக்கோயிலில் மூலவர் விங்கவடிவில் வித்யா சங்கரர் என்ற நாமத்தோடு இருக்கிறார். வித்யாரண்யர் ஞாபகார்த்தமாக அவரது சிஷ்யர் பாரததிர்த்தச் பிரதிஷ்டை செய்திருக்கிறார். இந்த வித்யாசங்கரர் கோயிலுக்கு மேல்புரம் சிறு. கோயில்கள் பல இருக்கின்றன. இவை எல்லாம் சங்கர மடத்து ஆச்சார்யார்களது சமாதிகளின் பேரில் கட்டப் பட்டிருக்கிறது. இவைகளையே சமாதிகுடி என்று சொல் கின்றனர். குடி என்றால் கன்னடத்தில் சிறு கோயில் என்று அர்த்தமாம். இந்த சமாதி குடிகளுக்கு மத்தியில் ஒரு குடியில் இருப்பவரை மலையாள பிரம்மா என்கின்றார் கள். ஐந்து அடி உயரத்தில் அவர் இருக்கிறார். ஆதியில் பிரம்மா ராட்சசனாக இருந்தவர் என்றும் அவர் போதும் போதும் என்று சொல்லும் வரை உணவருந்துவதாகச் சொல்லி வித்யாரண்யர் இங்கு அவரை நிறுத்தியதாகவும்: கர்ணபரம்பரை கூறுகிறது. இது காரணமாகவே இங்கு நடக்கும் விழாக்களில் எல்லாம், இந்த மலையாள பிரம்மா விற்கு நைவேத்தியம் பிரமாதமாக நடக்கிறதாம். வித்யா