பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 தோன்றுமால்-சூழும் திரண்டு அருவி பாயும் திருமலை மேல் எங்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து என்று ஹரிஹர வடிவத்தைப் பாடவும் தோன்றியிருக் கிறது. தமிழ் நாட்டுத் திருத்தலங்களை கண்டு வரும் போது திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவில் என்ற தலத்தில் சங்கர நாராயணர் வடிவைக் கண்டு தரிசித்து மகிழ்ந்திருக்கிறோம். வேங்கடத்திற்கு அப்பால் செல்லும் இத்தல யாத் திரையிலும் ஹரிஹரனைக் காண் கிறோம். அந்த ஹரிஹரன் கோயில் கொண்டிருக்கும் தலம் தான் ஹரிஹர். அந்த தலத்திற்கே செல்கின்றோம் நாம் இன்று. ஹரிஹர், மைசூர் ராஜ்யத்தில் மைசூருக்கு வடக்கே இருநூறுமைல் துரத்தில் இருக்கிறது மைசூர். அரிசிக் கரை பூனா ரயில் பாதையில் சென்றால் ஹரிஹர் என்ற ஸ்டேஷனிலேயே இறங்கலாம். காரில் சென்றர்ல் மைசூரி லிருந்து விமோகா சென்று அங்கிருந்து நாற்பது மைல் வடக்கு நோக்கிச் சென்றாலும் சென்று சேரலாம். இந்த ஊருக்குச் செல்ல விமோகாவிலிருந்து பஸ் வசதியும் உண்டு. ரயில்வேஸ்டேஷனுக்குத் தெற்கேமூன்று பர்லாங்கு துரரத்தில் துங்கபத்திரை நதிக்கரையில் இந்த ஹரி ஹரேஸ்வர் கோயில் இருக்கிறது. கோயிலுக்குக் கீழ்ப்புறம் கோட்டைச் சுவர் போல ஒரு மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தினுள்ளே நுழைந்து மேற்கு நோக்கி சென்றால் ஒரு திறந்த வெளி முற்றம் வந்து சேருவோம். அங்கு கிழக்கு நோக்கிய வாயிலுடன் கோயில் அமைந்திருக் கிறது. கோயிலை கோபுரம் ஒன்றும் அழகு செய்யாது. கன்னட கல்வெட்டுக்கள் நிறைந்த குத்துக்கல்கள் பல நின்று கொண்டிருக்கும். முன் சொன்ன மதில் வாயிலை ஒட்டி ஒரே கல்லால் உருவாகிய தீபஸ்தம்பங்கள் இரண்டு