பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை அமரர் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் என் குடும்பத்துடன் நெருங்கிப் பழகி என் வாழ்வில் இடம் பெற்ற ஒரு கலைச் செல்வர். அலரு டன் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிப் பழகும் வாய்ப்பும், அவர்தம் கம்ப இராமாயண உரைகளையும் பட்டிமண்டபப் பேச்சுக்களையும் கேட்கும் பேறும் பெற்றவன் நான். அவர்கள் கோவை வந்தபோதெல் லாம் என் இல்லத்திலேயே தங்கியதுடன் என் மகள் நிர்மலாவின் திருமணத்தையும் முன்னின்று தமிழ் முறைப்படி நடத்திவைத்தவர்கள். அவர்கள் வடஆற் காடு மாவட்டத்தின் நாயகராக இருந்து ஒய்வு பெற்ற பின்பு, கோவையில் நடைபெற்ற நன்னெறிக் கழக விழாக்களுக்காகவும் சன்மார்க்க சங்க விழாக்களுக்காக வும் வந்த, போதெல்லாம் என்னுடனேயே தங்கி மகிழ்ந் தார்கள். அவர்கள் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் தமிழ் நாட்டின் ஆலயங்களைப் பற்றி, வேங்கடம் முதல் குமரிவரை' என்னும் தலைப்பில் எழுதித் தமிழ் மக்களே மகிழ்வித்தார்கள். இவை முடிந்த பின் வடநாட்டுக் கோயில்களைப் பற்றி எழுதத் திருவுள் ளம் பாலித்து ஹிந்தியும் தமிழும் தெரிந்த என்னையும், என் கெழுதகை நண்பர் திரு. K. B. இராதாகிருஷ்ணன் அவர்களையும் அழைத்துக் கொண்டு திரு. இராதாகிருஷ்ணன் அவர்கள் காரிலேயே சென்று வடநாட்டுக் கோயில்கள் பலவற்றையும் நேரில் கண்டுகளிக்கும் பேற்றை நல்கினுர்கள். திரு. தொண்டைமான் அவர் கள் ஆலயங்களைப்பற்றி எழுதவே பிறந்தார்கள். அந்த வேலை முடிந்தவுடன் இறைவன் அவர்களை அழைத்துக் கொண்டான். இந்திய நாட்டின் கலைச் செல்வங்களைக் காண்பதற்கு நாம் தவம் செய்திருக்க வேண்டும். அவற்றைக் காட்டி