பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 துண்கள் எல்லாம் சாதாரணமானவை, சிற்ப வடிவங்கள் நிறைந்ததல்ல. ஆதலால் சிரமப்பட்டு இந்த மலை ஏற வேண்டாம் என்றே சொல்வேன். அங்கிருக்கும் சிவபெரு மானுக்கு கீழிருந்தே வணக்கம் செய்துவிட்டு தென் பக்க முள்ள மலைப் பக்கம் திரும்பலாம். ஊருக்குள்ளே பாதை வளைந்து வளைந்து செல்லும், பாதைக் குறுகலாக இருக்கும். அவைகளை எல்லாம் கடந்து மலையடிவாரத் திற்கு வந்தால் ஒரு படிக்கட்டு தோன்றும். படி ஏறுமுன்னே அண்ணாந்து பார்த்தால் அங்குள்ள குடவரை ஒன்று தோன்றும். கரடுமுரடான ஒரு பெரிய மலையின் ஒரு பக்கத்தை வெட்டிச் செதுக்கி அந்த பக்கத்திலே தலையி -லிருந்து முப்பது அடி உயரத்திற்கு மேலே மலையைக் குடைந்து ஒரு குடைவரை அமைத்திருக்கிறார்கள். இப்படி, கு ைட வ ைர ஒன்றல்ல, நான்கு குடை வரைகளை அந்த மலைச்சரிவிலே செதுக்கியிருக்கி றார்கள். இந்த நான்கில் முதல் குடைவரைத்தான் நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். சிவனுக்கு என்று அமைந்த குடைவரைக் கோயில். அதற்கு கீழ்புறம் அமைந் துள்ள இரண்டு பெரிய குடை வரைகளும் விஷ்ணுவிற்கு என்று ஒதுக்கப்பட்டவை. கடைசியாக ஒரு சிறுகுடை வரையை சமணர்களுக்கு என்று ஒதுக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குடைவரையின் முகப்பிலும் மலையினையே வெட்டிச் செதுக்கிய தூண்கள், அதற்கடுத்து ஒரு பெரிய முன்மண்டபம். அதன் பின்தான் உள் மண்டபம், கருவறை எல்லாம். இக்குடைவரைகள் எல்லாம் மாமல்லபுரத்துக் குடைவரைகளின் பாணியில்தான் அமைந்திருக்கும். ஆனால் மாமல்லபுரம் உருவாவதற்கு முன்னரே உரு வானவை என்று சரித்திர ஏடுகள் பேசுகின்றன. பாதாமிக் குடைவரைகள் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவானவை என்று சரித்திர ஆசிரியர்கள் கருதுகின்றனர். இனி, குடைவரைகள் இருக்கும் இடத்திற்கு படிக்கட்டு களின் வழியாக ஏறிச் செல்லலாம். முதல் குடைவரை