பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 உபா என்றால் நிற்றல் என்று பொருளாம். இந்த விட்டோபாவையே புண்டரீக வரதன் என்கிறார்கள், புண்டரீகன் இருந்த ஊர்தான் பண்டரிபுரம். அங்கு கோயில் கொண்டிருப்பவர்தான் பாண்டுரங்கன். அந்த பாண்டுரங்க விட்டலனைக் காணவே நாம் இன்று. பண்டரிபுரம் செல்கிறோம். இந்த பண்டரிபுரம் செல்ல சென்னையிலிருந்து பம்பாய் செல்லும் மார்க்கத்தில் குருதுவாடி ஜங்ஷனில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஜிராஜ் செல்லும் வண்டியில் ஏறவேண்டும். இப்ப்டிச் சென்றால் பண்டரி புரம் ஸ்டேஷனிலேயே இறங்கலாம். காரிலே செல்வதா னால் பீஜப்பூரிலிருந்து ஷோலாப்பூர் போய், அங்கிருந்து பூனா செல்லும் பாதையில் முப்பது மைல் போனால் தெற்கு நோக்கி ஒரு பாதை பிரியும். அந்தப் பாதை நல்ல சிமெண்ட் ரோடாகவும் இருக்கும். அந்த ரோட்டில் முப்பது முப்பத்திரண்டு மைல் சென்றாலும் பண்டரிபுரம் சென்று சேரலாம். பண்டரிபுரம் செல்லுமுன் ஒரு நதியைக் கடக்க வேண்டும். அந்த நதியையே பீமா நதி என்கின்றனர். இந்த நதி பண்டரிபுரத்தைச் சுற்றிக் கொண்டு அர்த்தசந்திர வடிவில் போவதால் இதனை சந்திரபாகாநதி என்றும் அழைக்கின்றனர். நதியைக் கடக்க பாலம் ஒன்றும் கட்டியிருக்கின்றனர். தெளிந்த தண்ணிர் ஓடுவதை கண்டால் அங்கு ஒரு முழுக்குப் போடலாம் என்றும் தோன்றும். அதிலும் பாண்டுரங்கன் கோயிலுக்கு செல்லும் நாம், நன்றாகக் குளித்து விட்டே செல்லலாம்தானே. - நதிக்கரையில் நிற்கும் போதே கோயிலின் சிகரங்கள் தெரியும் அதைக்குறியாக வைத்துக் கொண்டே தெருக்களில் வளைந்து வளைந்து சென்றால் கோயில் வாசல்போய்ச் சேரலாம். கோயிலை அடுத்த தெருக்கள் எல்லாம் குறுகிய தெருக்கள். பல கடைகள் இருக்கும். அ. தி ல் பலகாரக் கடைகளே அதிகம். பாண்டுரங்க விட்டலின் ஆராதனைக்கு