பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B ன் றி வணக்கம். ஒரு மனிதனது வாழ்நாளின் செம்பாதி துர்க்கத் தில் கழிந்து விடுகிறது என்பார்கள். எங்கள் தந்தை யார் திரு. தொ. மு. பாஸ்கரத் தொண்டைமானைப் பொறுத்தவரையில் அவர்களுடைய வாழ்நாளின் பெரும் பகுதி, கோயில்களில், அதுவும் தமிழ் நாட்டுக் கோயில் களில் கழிந்திருக்கிறது என்று சொல்வதே பொருத் தமாக இருக்கம். பக்தி ஒருபுறமிருக்க, பரம்பரை யாகவே ஊறி வந்த கலை உணர்வும் தாமாக வளர்த்துக் கொண்ட கால ஆர்வமுமே அதற்குக் காரணங்களாகும். வேங்கடம் முதல் குமரிவரை, தமிழ்கூறும் நல்லுலக மெங்கும் எழுப்பப்பட்டுள்ள கோயில்களைக் கண்டு, தாம் பெற்ற இன்பத்தை மற்றவர்களுக்கும் கட்டுரை வாயி லாக வழங்கியவர்கள் அவர்கள். விண்மறைக்கும் கோபு ரங்களோடு நின்று விடாது, சின்னச் சின்ன ஊரில் கூட சிற்ப நூலின் அற்புதம் கண்டு தெளிந்தவர்கள். திரு நெல்வேலி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணுபுரம் கோயிலின் சிற்பவடிவங்களை முதல் முதலாகக் கண்டபோது ஏற்பட்ட பரவசம்தான் அவர்கள் முதல் கலைக்கட்டுரை எழுது வதற்குத் துரண்டுகோலாக அமைந்தது என்று சொல்வக் கேட்டிருக்கிறேன். அதன் பின்னர் அவர்களுடைய கலைக் கட்டுரைகள் அவ்வப்போது, ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் முதலிய ஏடுகளில் வெளிவந்தது யாவரும் அறிந்ததே. தொண்டைமானவர்கள் பொறுப்பான அரசுப்பணியில் இருந்தவர்கள். அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற வுடன் தமிழகத்துக் கோயில்களைப் பற்றிய அவர்களு டைய கட்டுரைகள், கல்கியில் தொடர்ச்சியாக வெளி யிடப்பட்டுக் கலேயன்பர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அவ்வாறு அவர்களே எழுத ஊக்குவித்தவர் கள் கல்கி அதிபர் திரு. சதாசிவம் அவர்கள்தாம்,