பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 பார்க்கலாம். இந்த வாயிலுக்கு எதிர்ப்புறத்திலும் அந்தப் பிரபலமான தாஜ்மகால் ஹோட்டல்' இருக்கிறது. அது எல்லாம் நம்மைப் போன்றவர்கள் தங்குவதற்கு என்று ஏற்பட்டதல்ல. பணம் படைத்த பெருமக்கள் பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று தெரியாமல் திண்டாடும் அன்பர்கள் அவர்களுக்காகவே ஏற்பட்டது. ஆதலால் நாம் அதனை எட்ட இருந்து பார்த்துவிட்டே மகாலகி;மி கோயிலுக்குப் புறப்படலாம். கேட் வே ஆப் இந்தியா" விலிருந்து வடமேற்கே சுமார் ஐந்து மைல் துாரத்தில் கடற்கரையில் உள்ள ஒரு குன்றில் இந்தக் கோயில் இருக் கிறது. கீழேயுள்ள தெருவிலே காரை நிறுத்திவிட்டு பல படிகள் ஏறித்தான் இந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டும்அங்கு தமிழ் நாட்டில் உள்ள கோயில்களைப் போல் கோபுரத்தோடு கூடிய கோயில் இருக்கும் என்று எதிர் பார்த்தால் ஏமாந்து போவீர்கள். ஏதோ ஒரு பெரிய பங்களாவைப் போலக் கட்டியுள்ளதைத்தான் கோயில் என்கிறார்கள். முன்வாயிலில் மூன்று பெரிய ஆர்ச்சுகள். அந்த ஆர்ச்சுகளை தாங்கி நிற்கும் அழகிய தூண்கள் அதில் எல்லாம் சிற்பம் என்ற பேச்சே கிடையாது. இரவு நேரத்தில் போனால் மின் விளக்குகளால் அலங்கரித்திருப் பார்கள். இப்படியே பக்கங்களிலும் பல ஆர்ச்சுகள் அமைத்து ஒரு பெரிய மண்டபம் இருக்கும். அந்த மண்ட பத்தின் மத்தியில் ஒரு மேடை அதனையும் ஒரு சிறிய கட்டடமாகவே அமைத்திருக்கிறார்கள். அதுதான் மகா லக்ஷ்மியின் சந்நிதி. இந்த மகாலகடிமி தன்னலம் மிக்கவள் அல்ல. கோயிலில் நடுநாயகமாக இருக்கும் அவள், வலப் பக்கத்தில் மகாகாளியையும் இடப்பக்கத்தில் மகாசரஸ்வதி யையும் வைத்துக் கொண்டிருக்கிறாள். எல்லோரும் மூன்றடி உயரத்தில் உள்ள சிறிய வடிவினரே. முகத்தைத் தவிர மற்ற பாகங்களையெல்லாம் துணியால் மறைத் திருப்பதால் அவர்களது உடல், கை கால்களை எல்லாம் காண இயலாது. மூவர் தலையிலும் கிரீடங்கள் இருக்கும். இம்மூன்று தேவியர் முன்னால் உள்ள பீடத்தில் ஒரு