பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 அப்படி உடைந்து சிதைந்து எஞ்சி நிற்கும் சிற்ப வடிவங்களே அங்குள்ள வடிவங்களின் அழகை விளக்கு வதாகும். அப்படி அழகிய சிற்பவடிவங்கள் நிறைந்துள்ள குடைவரையை உடையதுதான் எலிபெண்டா. அந்த எலிபெண்டா என்னும் தீவிற்கே செல்கின்றோம் நாம் இன்று. எலிபெண்டா பம்பாயை அடுத்த கடலில் பம்பாய்த் துறை முகத்திலிருந்து நான்கு ஐந்து மைல் தூரத்தில் உள்ள ஒரு தீவு. அங்கு செல்ல அப்போலோ பந்தர் துறைமுகத்தில் இருந்து மோட்டார் லாஞ்சு விடுகிறார்கள். இந்த லாஞ்சில் ஏறிச் செல்ல மிகவும் அதிகாலையிலேயே அப்போலா பந்தர் துறைமுகம் செல்ல வேண்டும். இல்லையென்றால் பல அன்பர்கள் சேர்ந்து ஒரு லாஞ்சை ஏற்பாடு பண்ணிக் கொண்டு எந்த நேரமும் செல்லலாம். இப்படிச் சென்றால் தீவின் வடபுறம் நல்ல வசதியான இறங்கு துறைக்கே சென்று சேரலாம். அங்கிருந்து இரண்டு பர்லாங்கு தூரம் கட்டப்பட்டிருக்கும் படிகளை ஏறிக் கடக்க வேண்டும். அப்படிக் கடந்தால் அங்குள்ள பிரபல குடைவரைக் கோயிலுக்கே வந்து சேருவோம் இந்தப் படி களில் ஏறக் காலில் வலுவில்லாதவர்களை தூக்கிச் செல்ல 'கம்பு வைத்துக் கட்டிய நாற்காலிகளும் கூலிகளும் படகு இறங்கும் துறையிலேயே இருப்பர். அங்குள்ள குடைவரை களில் நுழையுமுன் இந்தத் தீவிற்கு ஏன் எலிபெண்டா என்ற பெயர் வந்தது என்று விசாரித்திட தோன்றும். அந்தக் காலத்தில் இந்தத் தீவில் இறங்கு துறையில் ஒரு பெரிய கல் யானை ஒன்று இருந்திருக்கிறது. அதன் நீளம் பதின்மூன்று அடி உயரம் ஏழு அடி இத் தீவிற்கு வந்த போர்ச்சுக்கீசியர் கண்ணில் முதன் முதல் இந்த கல் யானை தான் பட்டிருக்கிறது. அடே! இங்கே என்ன ஒரு பெரிய எலிபெண்ட் நிற்கிறதே என்று வியந்திருக்கிறார்கள். அதனால் இந்தத் தீவினையே எலிபெண்டா என்று அழைத் திருக்கின்றனர்-அந்தப் பெயரே நிலைத்தும் விட்டது.