பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix ரைகளும், வேங்கடம் முதல் குமரிவரை' கட்டுரைகள் போன்றே நூல்வடிவில் வரவேண்டும் என்று தொண் டைமானவர்கள் விரும்பினர்கள். அவற்றைத் தொகுத்து நூலாக வெளிக்கொணர்வதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. மன்னிக்க முடியாத குற்றம்தான். என் ருலும் அதற்கு ஈடு செய்யும் வகையில் அபிராமி பதிப் பகத்தார் அதனை நல்ல முறையில் அழகாக உருவாக்கித் தந்திருக்கிருர்கள் வடவேங்கடவனும், மைசூர் நந்தியும், ஐஹோளே துர்க்கையும், அஜந்தாவின் போதி சத்து வரும் அட்டையை அலங்கரிக்கிருர்கள். கையில் எடுக் கும் போதே கலை மணக்கிறது. - . . கட்டுரைகளைத் தொடர்ந்து கல்கியில் வெளியிட்டு ஊக்கப் படுத்திய கல்கிப் பத்திரிகையின் உரிமையாளர் திரு. சதாசிவம் அவர்களுக்கு நன்றி கூற நான் பெரிதும் கட்மைப் பட்டிருக்கிறேன். இந்த நூலுக்கு அரிய அணிந்துரை வழங்கியுள்ள திரு. மீ. ப. சோமசுந்தரம் அவர்கள் என் தந்தையின் நீண்ட நாளைய நண்பர். அகில இந்திய வானெலி நிலையத்தில் உயர்ந்த பதவி இத்தவ்ர். சிறந்த இலக்கியச் சித்தர் டி. கே. சி. வட்த்தொட்டியின் இப்போதைய தலைவர். அவர்க ளுடைய அணிந்துரையில் தொண்டைமான் அவர்க விடத்தில் அவர்கள் கொண்டிருக்கும் பாசமும் பரிவும் வரிக்கு வரிபொங்கித் ததும்பி நிற்பதை உணர முடிகிறது. அணிந்துரை வழங்கியுள்ள அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி. இந்த நூலுக்கு முகவுரை வழங்கியிருப்பவர், திரு. இரிதாரி பிரசாத் அவர்கள். இந்த வடநாட்டுத் தலயாத் திரையில் பங்கு கொண்ட பெருமைபடைத்தவர். கிரிதாரி பிரசாத் அவர்களை ஆன்மீக உலகம் நன்கறியும். கீதைக்கு விளக்கம் சொல்லிச் சொல்லி பண்பட்ட நாவில்ை வள்ளலாரின் அருட்பாக்களுக்கு விளக்கம் தந்து கொண்டிருப்பவர்கள். தென்னுட்டு விவேகானந்தர் என்று