பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 எண்ணிய எண்ணியாங்கு எய்தி வாழும் பேற்றையுமே பெறுகின்றனர். அந்த மகான் தங்கியிருந்த இடம்தான் சிர்டி என்பது. இதனை நல்ல தமிழில் சீரடி என்றும் சொல்லலாம். சாயிபாபா என்னும் மகானின் சீரடியில் விழுந்து வணங்கி அருள்பெறவே நாம் இன்று அந்தச் சீரடிக்குச் செல்கின்றோம். சீரடி, பம்பாய் ராஜ்ஜியத்தில் அகமத் நகர் ஜில்லாவில் உள்ள ஒரு சிறிய ஊர், பூனாவிற்குக் கிழக்கேயுள்ள டோன்ட் சந்திப்பிலிருந்து வடக்கு நோக்கி மான்மாட் செல்லும் ரயிலில் சென்றால் அகம்மது நகரைக் கடந்து கோப்பர்காள் என்ற ஊருக்கு வந்து சேருவோம். இங்கு இறங்கி அங்கிருந்து பன்னிரண்டு மைல் வடமேற்கு நோக் கிச் சென்றால் சீரடி வந்து சேரலாம். சாயிபாபா சமாதி யாகியிருக்கிற இடத்தில்தான் சாயிபாபா மந்திர் என்ற கோயிலைக் கட்டியிருக்கின்றனர். அக் கோயிலுக்குத் தான் எண்ணிறந்த பக்தர்கள் நாட்டின் பல பாகத்தி லிருந்தும் வந்து வழிபாடு செய்து திரும்புகின்றனர். இக்கோயிலுக்குச் செல்லுமுன், சாயிபாபா என்றால் யார், அவர் வரலாறு என்ன என்பதையும் கொஞ்சம் தெரிந்துக் கொள்ள வேண்டாமா? பாபாவின் பூர்வோத் தரம், பிறப்பு முதலியவைகளைப் பற்றிச் சொல்லக்கூடிய வர்கள் ஒருவருமே இல்லை என்றாலும் பாபா சொன்ன வைகளினின்று அவரது பக்தர்கள் ஊகித்துத் தெரிந்து கொண்டவற்றையே சிலர் சொல்லிவருகிறார்கள். கிட்டத் தட்ட நூற்று ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் அதாவது 1820-ம் வருஷத்தை ஒட்டி, அன்றைய நைஜாம் ராஜ்யத் தில் உள்ள பாத்ரி என்ற கிராமத்தில் ஒர் அந்தணர் குடும் பத்தில் பாபா பிறந்திருக்கிறார். பெற்றோர் மிகவும் ஏழைகளாகவே வாழ்ந்து இருக்கின்றனர். பாபாவுக்கு ஐந்து வயது நிரம்புகிறபோது, அக்கிராமத்திற்கு வந்த முகம்மதிய பக்கிரி ஒருவர், பாபாவைத் தன்னுடன்