பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 உடனேயே தன் சிற்றுளியால் மலையின் உச்சியிலிருந்து மலையை வெட்டிச் .ெ ச து க் க முனைந்திருக்கிறான். அப்படிச் செதுக்கியே பூமியின் தளத்திற்கு வந்திருக் கிறான். இதனாலே சாரம் கட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றும் இல்லாமலேயே அவனால் இக்குடைவரை அமைக்க முடிந்திருக்கிறது. இக்குடைவரையை உருவாக்க ஒரு நூறு. வருஷமாவது ஆகியிருக்க வேண்டும் என்றும், இக்குடை வரையைக் குடைந்து கிட்டத்தட்ட முன்னுாறு லட்சம் கன அடியுடைய கற்கள் அப்புறப் படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் இன்றைய கட்டிடக்கலை நிபுணர்கள் கணக்கிடு கின்றனர். இந்த மதிப்பீடு ஒன்றே இக்குடைவரை எவ்: வளவு பிரம்மாண்டமானது என விளக்கப் போதியதாகும். இது சிற்பக்கலை உலகில் ஒரு அரிய சாதனைதான். இங்கு நான் சென்றபோது எனக்கு இருந்த அதிசயம் எல்லாம் இப்படி ஒரு குடைவரையை உருவாக்கத் திட்டமிடுவதற்கு அந்தச் சிற்பிகளின் தலைவன் எவ்வளவு சிந்தனை செய் திருக்க வேண்டும். எவ்வளவு கற்பனைகள் அந்தச் சிந்தனை பில் உதித்திருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணி எண்ணிப்பார்த்தேன். இந்த விஷயங்களை எல்லாம் என்னாலே கற்பனை பண்ணிப்பார்க்கவே முடியவில்லை. இக்குடைவரையின் அளவைப்பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டபின் இனி ந ம் குடைவரைக்குள்ளேயே, நுழையலாம். . நுழைவாயிலே பிரமாண்டமானதாக இருக்கும் வாயிலின் இரண்டு பக்கங்களிலும் பெரிய பெரிய காத்திர மான சிற்பவடிவங்கள், வாயிலில் நுழைந்து உள்ளே சென் றால் நமக்கு எதிரே கஜலக்ஷ்மி காட்சி கொடுக்கிறாள். ஒரு பெரிய தாமரைக் குளம். அந்தத் தாமரைக் குளத்தில் பூத்த ஒரு தாமரை. அத்தாமரையில் கொலுவிருக்கும் லக்ஷ்மி. அந்த லக்ஷ்மியை நீராட்ட நான்கு யானைகள், ஒரு யானை தண்ணிரை மொண்டு அடுத்த யானையிடம் கொடுக்க, அதை அடுத்த யானை வாங்கி அபிஷேகம்