பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293 துளையிடப்பட்ட சன்னல்கள் பல இருக்கின்றன. இது போன்ற வே ைல ப் பா டு ைட ய சன்னல் உலகில் வேறு எங்குமே இல்லையாம். அகம்மது ஷாவின் ச மா தி 1414-ல் கட்டப்பட்டதொன்று. இங்குள்ள துரண்கள் எல்லாம் இந்தியக் கட்டிடக்கலையினர் பாணியிலும் விதானம் எல்லாம் ச ர ர் சா னி க் பாணியிலும் அமைந்திருக்கின்றன. அன்றிருந்த இந்திச் கோயில்கள் ஒரு சிலவற்றை இடித்து அங்குள்ள தூண் களைக் கொண்டு இம்மசூதி கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இன்னுமொரு அதிசயம் என்ன வென்றால் ஜும்மா மசூதியில் உள்ள இரண்டு கோபுரங்கள் நாம் கையால் ஆட்டினால் ஆடுகின்றன. இவைகளில் ஒன்றுதான் இன்று இருக்கின்றது. மற்றொன்று 1818-ல் நேர்ந்த பூகம்பத்தில் விழுந்திருக்கிறது. தில்லி தர்வாஜா வுக்கு பக்கத்தில் உள்ள ஹதீசிங் கோயில் அகமதாபாத்தில் உள்ள பிரபலமான சமணர். கோயில் கிட்டத்தட்ட ஆபூமலையில் உள்ள டில்வாரா கோயிலுக்குச் சமமானது. எல்லாம் வெள்ளைச் சலவைக் கல்லால் கட்டப்பட்டது. 53-கோபுரங்களைத் தாங்கி நிற்கிறது. இன்னும் 24 சமண தீர்த்தங்கரர்களின் வடிவங்களையும் அமைத்து வைத்திருக் கின்றனர். கலை அழகு நிரம்பிய கோயிலாக அது விளங்கு. கின்றது. அகமதாபாத்தின் தென்பகுதியிலே ஷாஆலம் ரோஜா என்னும் தொழுகைத்தலம் ஒன்றும் அமைத்திருக் கிறார்கள். நூர்ஜஹானின் தம்பி இதன் ஸ்து பிகளை நவரத்தினத்தால் அ ல ங் க ரி த் து வைத்திருந்தானாம். ஆனால் இப்போது, நவரத்தினங்கள் ஒன்றுமே இல்லை. இதனை அடுத்து சந்தோலா ஏரி என்று ஒரு பெரிய ஏரி இருக்கிறது. ஆண்டு தோறும் நவம்பர் மாதத்தில், தமிழ் நாட்டு வேடந்தாங்கலைப் போல பல தேசத்துப் பறவை கள் வந்து தங்கும் இடமாக இந்த ஏரி விளங்குகிறது. இன்னும் இந்நகரத்துக் கோட்டையை அடுத்து பத்ரா என்று ஒரு இடம் இருக்கிறது. அங்குள்ள கோட்டை வாசலை சிவப்பு வாயில் என்று அழைக்கின்றனர். இங்கே