பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சோமநாதபுரத்து சோதிர்லிங்கம் பத்து வருஷங்களுக்கு முன் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலைப் பற்றி நான் எழுதுகிறபோது அது தமிழ் நாட்டின் சோமநாத் என்று குறிப்பிட்டேன். வேலூரில் சில அதிசயங்கள் அன்பர்களுக்கு காத்திருக்கிறது. அங்கு ஆறு இருக்கும் ஆனால் அதில் நீர் இருக்காது. கோட்டை இருக்கும் அதனுள் கோமகள் இருக்கமாட்டாள். கோயில் இருக்கும் அங்கு மூர்த்தி இருக்காது. இப்படி மூர்த்தி இல்லாமல் கீர்த்தியுடைய வேலூரைத்தான் தமிழ் நாட்டின் சோமநாத்துடன் ஒப்பிட்டிருந்தேன். அப்போது சோமநாத புரத்தை நான் பார்த்திருக்கவில்லை. அங்குள்ள சோம நாதனை கஜினி முகம்மது அகற்றிவிட்டான் என்று புத்தகங் களில் படித்திருந்ததை வைத்துத்தான் அப்படி எழுதினேன். ஆனால் இப்போது சோமநாதபுரத்தை நேரில் சென்று பார்த்த பின், வேலூரை சோமநாதபுரத்தோடு ஒப்பிட்டது தவறு என்று அறிந்தேன். வேலூரில் கோயிலில் உள்ள மூர்த்திகளைத்தான் அகற்றினார்களே ஒ ழி ய, அக் கோயிலை அழியாமல் காப்பாற்றி வந்திருக்கின்றனர் இன்றுவரை. ஆனால் சோமநாதபுரத்திலோ ஒரு தடவை அல்ல, பலதடவை மூர்த்தியோடு கோயிலையும் சேர்த்து இடித்து தரை மட்டமாக்கியிருக்கின்றனர். அங்குள்ள சோதிர்லிங்கமோ, சோமநாதரோ இத்தனை இடிபாடு கட்கு உள்ளாகியும் திரும்பவும் திரும்பவும் உருப்பெற்றிருக் கின்றனர். கடைசியில், நம் நாட்டின் இரும்பு மனிதர் என்று புகழ்பெற்ற சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் முயற்சியால், இந்தியா சுதந்திரம் அடைந்த பின் திரும்பவும் அக்கோயில் கட்டப்பட்டு இன்று வானளாவ உயர்ந்திருக்கிறது. அ ந் த சோமநாதர் கோயிலைக் காணவே இன்று நாம் சோமநாதபுரம் செல்கின்றோம்.