பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

319 தனிக் கோயில் இருக்கிறது. தமிழ் நாட்டு வைத்தீஸ்வரன் கோயிலைப் போல வேம்பு வேறே அங்கு தலைவிருட்சமாக நிற்கிறது. ஜாம்நகர் சமணக் கோயில்களையும் புருஷோத்தமன் கோயிலையும், சத்திய நாராயணர் கோயிலையும் மட்டும் பார்த்துவிட்டால், ஜாம்நகர் முழுவதையும் பார்த்துவிட்ட தாக ஆகி விடாது. ஜாம்நகர் ஊருக்கு வட மேற்கே மூன்று மைல் தூரத்தில் சோலேரியம் என்று ஒரு கட்டிடம் இருக் கிறது. சூரிய ரஸ்மியை சில கண்ணாடிகள் மூலம் உடலில் பாய்ச்சுவதால், என்ன என்ன வியாதிகள் நீங்கும் என்று தெரிந்து அதற்கென ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் கட்டிவைத்திருக்கிறார்கள். அக்கட்டிடம், ஆகாய விமானத் தைப்போல் ஒரு பெரிய வாலுடன் கூடியதாக இருக் கிறது. அந்த வால் பகுதியிலேதான் சிகிச்சைக்கு வருபவர் களை வைக்கிறார்கள். சூரிய ரஸ்மி எவ்வளவு பட வேண்டுமோ அவ்வளவு படும் வகையில் அந்தக் கட்டிடப் பகுதியே சுழல்கிறது. சூரிய ரஸ்மி படப்பட நோய் நீங்குகிறது. இப்படிப்பட்ட சோலேரியம் என்ற சூரிய ரஸ்மியால் ஏற்படும் இயற்கை சிகிச்சைக்கட்டிடம் இந்தியாவிலேயே இது ஒன்று தான் இருக்கிறதாம். நமக்குச் சிகிச்சை ஒன்றும் தேவை இல்லை, என்றாலும், சிகிச்சை பெறுபவர்களைப் பார்த்து வரலாம் அல்லவா? அதற் காகவே அங்கு சென்று திரும்பலாம். இன்னும் ஒன்று. மருத்துவத் துறையில் என்ன என்ன முறைகள் எல்லாமோ இருக்கின்றன. எல்லாவற்றிக்கும் தலையாய முறை ஆயுர் வேதமே என்பதை அறிவோம். அந்த ஆயுர்வேத வைத்திய முறைக்கு ஒர் ஆராய்ச்சிக் கழகம், இந்த ஜாம் நகரில் தான் இருக்கிறது. இங்கு ஆயுர் வேத முறையை ஆராய்ந்து வரும் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். தோல் வியாதிகள் சம்பந்தமாக பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அங்கு சென்றதும் எனக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த ஆராய்ச்சி நிலையத்தின் உதவி