பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 கும்பா, மகாராணா சங்கிரமசிங், மகாராணா பிரதாப்: அவர்களது வீரதீரச் செயல்களும் புகழும் சரித்திர ஏடுகளில் ஏறி நிற்கின்றன. இக்கோட்டையின் முதல் முற்றுகை 1803-ல் என்று சரித்திரம் கூறுகிறது. அலாவுதீன் கில்ஜி படையெடுத்து வந்து கோட்டையைக் கைப்பற்றி ராஜ புத்திர மன்னர் ராவல் ரத்தன்சிங் என்பவனைக் கைது செய்து போயிருக்கிறான். அந்த ராஜபுத்திரமன்னன் மனைவிதான். புகழ்பெற்ற சித்துரர் ராணி பத்மினி. அவனு டைய சூழ்ச்சியினாலும் கோரா, பாடல் என்ற இரண்டு வீரர்களது திறமையினாலும் மன்னனை சிறைமீட்டிருக் கிறார்கள். இந்தப் பத்மினியின் அழகைக் கண்ணாடியில் கண்டே அலாவுதீன் கில்ஜி சித் தூர் கோட்டை மீது படை எடுத்தான் என்பது வரலாறு. கில்ஜியின் அடுத்த தாக்குதலில் கோட்டை தகர்ந்து விடுகிறது. ராஜபுத்திரர் கன் எல்லாம் போரிட்டு போர்க்களத்தில் மடிந்து விடு கின்றனர். ராணி பத்மினியும் மற்றைய ராஜபுத்திரப் பெண்மணிகளும் தீக்குளித்து வீரமரணம் எய்தி தங்கள் மானத்தையும் புகழையும் காப்பாற்றிக் கொண்டிருக் கின்றனர். பின்னர் அலாவுதீனது பிரதிநிதியைத் தோற்கடித்து ராணா ஹமீர் என்பவன் சித் துார் கோட்டையைக் கைப் பற்றுகிறான். இவன் வழி வந்த ராணா கும்பாவின் காலத்தில்தான் சித்துார் பழையபடியும் பெருமை அடை கிறது. அவன் கோட்டையைப் பலப்படுத்தினான். பல கட்டிடங்களைக் கட்டினான். மால்வா, குஜராத் முதலிய இடங்களிலிருந்து ஆண்ட முகம்மதிய மன்னர்களை எல் லாம் வென்று அந்த வெற்றியின் சின்னமாகவே ஜயஸ் தம்பம் ஒன்றையும் கட்டி வைத்தான். அந்த ராணாகும்பா சகலகலா வல்லவன். கவிதையும், கலையும் இவன் காலத். தில் ஆக்கம்பெற்றன. இவனே ஜயதேவரது கீதக்ோவிந்: தத்தை மொழி பெயர்த்திருக்கிறான். இவன் பின் வந்த வீர ராஜபுத் திர மன்னரே மகாராணா சங்கரம் சிங். இவனே சுருக்கமாக ராணா