பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

363 கோயிலுக்கு நடுநாயகமாக இருக்கும் மகாகாலர் சந்நிதிக்கே வந்து சேரலாம். இங்கு கோயில் வாயிலில் நீலகண்டேஸ்வரர் இருக்கிறார். இம்மகா காலர் கோயில் இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்களில் ஒன்று. இக்கோயில் ஐந்து அடுக்குகள் கொண்டது. மூன்று அடுக்கு களில் மூன்று லிங்க வடிவங்கள் இருக்கின்றன. பூமி மட்டத் திற்கு அடியில் இருப்பவர்தான் மகாகாலர். அவரே ஜோதிர்லிங்கம். படிகளின் வழியாக இறங்கியே அவர் சந்நிதிக்குச் செல்லவேண்டும். அங்கு எப்போதும் இருள் சூழ்ந்திருப்பதால் விளக்கு எரிந்தபடியே இருக்கும். அந்த மகாகாலர் வழிபாட்டில் ஒர் அதிசயம். அவருக்குச் சமர்ப் பித்த எந்தங் பொருளும் நிர்மால்யம் ஆவதில்ைைல. அவற்றை எடுத்து திரும்பவும் அவருக்கே சமர்ப்பிக்கலாம். நாம் பூமாலை வாங்கிச் சென்றிருந்தால் அதை அவருக்கு அணிவித்து கற்பூர ஆரத்தி பண்ணி வணங்கிவிட்டு திரும் பலாம். அவருக்கு மேலே பூமி மட்டத்திலேயே இருப்பவர் தான், ஓம்காரேஸ்வரர். அவருக்கு மேலே மூன்றாவது மாடியில் இருப்பவர்தான் தாரகேஸ்வரர், எல்லோரும் லிங்கத்திருவுருவிலேயே இருக்கிறார்கள். இந்த மகாகாலர் இங்கு கோயில் கொண்டிருப்பதற்கு ஒரு கதை உண்டு. ஆதியில் அவந்தி நகரில் ஒரு அந்தணர் ஒருவர் இருந்திருக் கிறார். பக்கத்தில் உள்ள மலைப்பிரதேசத்தில் தூஷணன் என்று ஒரு வேதாளம் இருந்திருக்கிறது. அது மக்களை மிகவும் துன்பப்படுத்தியிருக்கிறது. மக்கள் எல்லாம் அங்கி ருந்த அந்தணரிடம் வந்து முறையிட்டிருக்கின்றனர். அந்தணர் ஒரு பெரிய யாகம் ஒன்றைச் செய்து சிவனை நினைந்து வணங்கியிருக்கிறார். அவரது தபோவனத்தில் பூமியே வெடித்து மகாகாலர் தோன்றியிருக்கிறார் . தூஷணன் என்னும் வேதாளத்தையும் வதம் செய்திருக் கிறார். பின்னர் அந்த அந்தணர் வேண்டிக் கொண்ட படியே அங்கேயே கோயில் கொண்டிருக்கிறார். பூமி வெடித்து தோன்றியவராதலினால்தான் அவர் இன்னும் பூமிக்கடியிலேயே வாழ்ந்து வருகிறார். இம்மாகாகாலர்