பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 உண்மையை அழுத்தமாக நமக்குக் காட்டுவதற்கு எழுந்த தலத்தில் ஒன்றுதான் புஷ்கரம். அங்கு பரந்தாமன் நீர் உருவில் இருக்கிறான் என்பது ஐதீகம். அதற்கேற்றாற்போல் அங்கு ஒரு பெரிய தடாகம். அத்தடாகமே பரந்தாமன் அதில் மூழ்கி எழுபவர் வினையெல்லாம் களையப்படுகிறது. இறைவனோடு கலந்து ஆடும் இன்பம் பெற்றுவிட்டால் அதன் விணைகள் நிற்பது ஏது? அந்த புஷ்கரம் என்னும் தலத்திற்கே செல்கின்றோம் நாம் இன்று. அங்கு சென்று புஷ்கரத்தில் நீராடி வினை களைவோம் வருகிறீர்களா? புஷ்கரம் செல்ல முதலில் ஆஜ்மீர் செல்ல வேண்டும். ரயிலில் சென்றால் பம்பாயில் இருந்து புறப்பட்டு ரட்லம் ஐங்ஷனில் ரயில் மாற்றி ஆஜ்மீர் செல்ல வேண்டும். ஆஜ்மீர் பம்பாயிலிருந்து கிட்டத்தட்ட 1000 மைல் துரத் தில் இருக்கிறது. சித்துரர்கர் என்னும் ஸ்டேஷனிலிருந்து 117-மைல் தூரம்தான். வட இந்திய யாத்திரையைக் காரி .ே ல ேய செல்பவர்கள் என்றால் அகமதாபாத் உதயப்பூர், சித்துரர் எல்லாம் பார்த்துவிட்டே செல்லலாம். ரோடுகள் எல்லாம் மிகவும் நன்றாயிருக்கும் என்று சொல்லமுடியாது. புஷ்கரத்தில் தங்குவதற்கு வசதியான இடங்கள் கிடையாது. ஆதலால் ஆஜ்மீரில் உள்ள டுரிஸ்ட் ஹோமிலேயே தங்கிக் கொண்டு அங்கிருந்து ஏழு மைல் தாரத்திலேயுள்ள புஷ்கரத்திற்கு சென்று திரும்பிவிடலாம். பஸ், டாக்சிகள் எல்லாம் கிடைக்கும். ஆஜ்மீரும் பிரசித்திப்பெற்ற நகரம் ஆயிற்றே! ஆத லால் முதலில் ஆஜ்மீரையே ஒரு சுற்று சுற்றலாம். ஆதியில் அஜயமேரு என்றே அந்த ஊர் பெயிர் பெற்றிருக்கிறது. வெற்றியைத் தவிர வேறு அறியாத ஊராக கருதப்பட்டி ருக்கிறது. அஜயபாலசெளஹான் என்பவனால் ஏழாம் நூற்றாண்டிலே இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் அஜயராஜன் என்ற மன்னவன் காலத்தில்தான் பிரசித்தி பெற்றிருக் கிறது. பலராஜபுத்ர வீரர்கள் இருந்து அரசாண்டிருக்