பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

379 செய்பவர்கள் என்றால் பம்பாய் அகமதாபாத், ஆஜ்மீர் வழியாகவும் ஜெய்ப்பூர் சென்று சேரலாம். மிகவும் வசதி யான பயணம் விண்வெளிப் பயணம்தான். டில்லியிலிருந்து விமானம் மூலம் சென்று திரும்புவதே வசதியானது. எப்படிச் சென்றாலும் ஜெய்ப்பூரைச் சென்று சேர்ந்ததும் நாம் முதல் பார்த்துப் பிரமிப்பது அதன் விசாலமான தெருக்களே. பிரதான வீதிகள் எல்லாம் 100 அடி அகலம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த நகரத்தை மூன்று பக்கங்களிலும் மலைத்தொடர்கள் சூழ்ந்திருக் கின்றன. இந்தப் பாதுகாப்பு அரணைத் தவிர நகரத்தைச் சுற்றி ஒரு பெரிய மதிலும் கட்டப்பட்டிருக்கிறது. மதில் சுவர் 20 அடி உயரமும் 9 அடி கனமும் உடையது என்றால் அதைக்கட்ட எவ்வளவு செலவாகியிருக்கும் என்று கணக் கிட்டுக் கொள்ளலாம் தானே? இந்த மதில் சுவர்களில் எட்டு வாயில்கள் அமைத்திருக்கிறார்கள். இவைகளில் முக்கியமானவை மூன்று வாயில்களே. கிழக்கு வாயிலை சூரஜ்போல், மேற்கு வாயிலை சாந்த்போல், வடக்கு வாயிலை, துருவபோல் என்றும் கூறுகிறார்கள். போல் என்றால் வாயில் என்று அர்த்தமாம், ரயிலில் வந்தாலும் ஆஜ்மீரிலிருந்து காரிலே வந்தாலும் மேற்கு வாயிலான சாந்த்போல் வழியாகத்தான் நகருக்குள் நுழையவேண்டும். இந்த வாயில்களை நல்ல தமிழிலேயே சொல்ல விரும் பினால் சூரியன் வாயில், சந்திரன் வாயில் துருவவாயில் என்றே கூறலாம். அந்நகரை அமைத்தவர் ராஜா ஜெய்சிங், அவர் கட்சுவா ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர். அந்த மன்னர்கள் இரு ந் து ஆண்டுள்ள இடம் தான் அம்பர் கோட்டை. அங்குள்ள கோட்டை கொத்தளங்கள் போதிய பாதுகாப்பு உடையவை அல்ல என்று கண்டு ஜெய்சிங், இந்த நகரை நிர்மானித்தார் என்று சரித்திர ஏடுகள் பேசு கின்றன. அவர் வான சாஸ்திர வல்லுநர். அதனாலேயே சூரிய, சந்திர, துருவநட்சத்திரம் முதலிய பெயர்களையே தான் அமைத்த நகரத்தின் பிரதான வாயிலுக்கு இட்டிருக் கிறார். வானசாஸ்திர மேதைகளும் சிற்ப சாஸ்திர