பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 பெரு வீதிகளிலே தான் டவுன் பஸ்ஸும் போகிறது. பிரயாணிகள் அதிகநேரம் காத்து நிற்காதவகையில் அடுத்தடுத்து பஸ்கள் ஒடிக்கொண்டிருக்கும் மெதுவாகச் செல்லும் வண்டிகளுக்கு என்று தனிப்பாதை, சைக்கிளில் செல்பவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பாதைகளும் பாதசாரிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட பாதைகளும் உண்டு. புதிதாக அமைக்கும் நகரத்தின் பாதை அமைப்பு மனித உடலில் ஒடும் ரத்தக் குழாய்கள் போன்றவை. ஆகவே அவைகளின் அமைப்பிலும் அவைகளைப் பாதுகாப்பதிலும் மிக்க கவனம் செலுத்தப்பட வேண்டும். அந்த அக்கறை இந்த நகரத்தில் காட்டப்படுகிறது. இனி இங்குள்ள கட்டிடங்கள், மக்கள் குடியிருக்கும் வீடுகள், சர்க்கார் காரியாலயங்கள், மக்கள் பொழுது போக்காக அமைந்த உத்தியான வனங்கள், சினிமாக் கொட்டகைகள், இன்னும் பல்பண்டம் வாங்க அமைந்த கடைத்தெருக்கள் என்று பற்பல வகையான கட்டிடங்கள். இங்குள்ள சர்க்கார் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கட்டடம் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். சர்க்கார் சேவகனாக வேலை பார்க்கும் ஒவ்வொரு சப்ராசிக்கும் தனித்தனி வீடு என்றால் அதிகம் சொல் வானேன். வீடுகள் என்றால் ஒலைக்கூரை குடிசைகளா? இல்லை. எல்லாம் நல்ல சிமெண்ட்டு காரைக்கட்டிடங்கள். காற்றோட்டமுள்ள அறைகள்-வராந்தாக்கள், சமையல் கூடம், குளிக்கும் அறை, நவீன வசதியோடு கூடிய கக்கூசுகள், எல்லாம் மின்சார விளக்கு வசதிகளுடன் என்று அமைத்திருக்கிறார்கள். இந்த வீடுகளைப் பார்க்கும் போது நமது சர்க்கார் பெரிதும் பேசுகின்ற ஜனநாயக சோஷியலிசம் எப்படி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது தெரியும். எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லைமாதோ.