பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

415 கின்றனர். மேருமலையையே மத்தாக நட்டு வாசுகியையே கயிறாகக் கொண்டு அக்கடலைக்கடைந்திருக்கின்றனர். கடலுள் மேரு தாழ்ந்துபோக கூர்மவடிவில் பரந்தாமனே வந்து தன் முதுகில் தாங்கியிருக்கிறான், மத்தாகிய மேரு ம ைல ைய. அப்படிக்கடைந்த பாற்கடலிலிருந்துதான் திருமகள் எழுந்திருக்கிறாள். கடைசியில் அமுதம் பிறந் திருக்கிறது. பரந்தாமனே மோகினிவடிவில் வந்து அசுரர் களை ஏமாற்றிவிட்டு தேவர்களுக்கே அமுதம் முழுவதையும் கொடுத்திருக்கிறான். அதனால் அவர்கள் அமரர் ஆகி யிருக்கின்றனர். என்பது புராணக்கதை. மணிவாசகப் பெரு மான் இறைவனையே ஒர் அமுதப் பெருங்கடல் என் கின்றார். நம் புலன்கள் ஆரவந்து என்னை ஆட்கொண்டு உள்ளே புகுந்து மாலமுதப் பெருங்கடல் சிவன்’ என்றே திருவாசகத்தில் கூறுகிறார். இந்த அமுதப்பெருங்கடல் நம் கட்புலனால் காணும் வகையிலும், நாமெல்லாம் குடைந்து ஆடும் வகையிலும் அமைந்திருக்கிறது, நமது நாட்டிலே என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுப்பீர்கள். ஆனால் நானே நேரே உங்களை அந்த அமுதக்கடல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்போகிறேன். என்ன வருகிறீர்களா? டில்லிக்கு மேற்கே முன்னூறு மைல் தூரத்தில் பஞ்சாப் ராஜ்யத்தில் இருக்கிறது. இந்த அமுதக்கடல், அதனைத் தான் அமிர்தசரஸ் என்று அழைக்கின்றனர் ம க் க ள். இது சீக்கியரின் புண்ணியத்தலங்களில் முதன்மையானது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து கிழக்கே பதினாறு மைல் துரத்தில்தான் இருக்கிறது. டில்லியிலிருந்து ஃபிராண்டியர் மெயிலில் ஏறினால் அமிர்தசரஸிலே சென்று இறங்க லாம். இல்லை டில்லியிலிருந்து அம்பாலா லூதியானா, ஜலந்தர், லாகூர் வழியாகவும் ஜம்' என்று காரில் சென்று அமிர்தசரஸ் சேரலாம். அமிர்தசரஸ்ஸ்ை சென்று சேருமுன்பே அந்த பஞ்சாப் ராஜ்ஜியத்தில் பிரதான குடிகளாக இருக்கும் சீக்கியரைப்