பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. ரீநகர் மார்த்தாண்டர் தேன்படிமலரது, செங்கண் வெங்கைம்மா தான் படிகின்றது தெளிவு சான்றது மீன்படிமேகமும் படிந்து வீங்குநீர் வான்படிந்து உலகிடைக் கிடந்த மாண்பது. என்று கவிச்சக்கரவர்த்தி கம்பன் கிஷ்கிந்தையை அடுத்த. பம்பைப் பொய்கையை வர்ணிக்கிறான். வர்ணனையை, வளர்த்துக்கொண்டே சென்று, கற்பகம் அனைய அக் கவிஞர் காட்டிய சொல்பொருளாம் எனத் தோன்றல் சான்றது. என்றெல்லாம் பேசுகிறான். இந்த கம்பன் காஷ்மீரத், துக்குச் சென்று அங்கு இயற்கை அன்னை எத்தனை பொலி வுடன் விளங்குகின்றாள் என்று மட்டும் கண்டிருப்பானா னால் அவற்றை எப்படி எப்படி எல்லாம் வர்ணித்திருப் பான். ஒரு வேளை கம்பனுக்குமே சொல்ல அரிதாக அந்த எழில் இருந்திருக்குமோ என்னவோ! அத்தகைய இயற்கை எழில் நிறைந்த பிரதேசம்தான் காஷ்மீர். உலகில் மிக்க அழகுடையவை எ ன் று கருதப்படும் பொழில்களும் பொய்கைகளும் இங்குதான் இருக்கின்றன. மலைகளும் மரங்களும், சோலைகளும் பூங்காக்களும், காடுகளும் கணித் தோட்டங்களும் பெரிய ஆறுகளும் தடாகங்களுமாக