பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 காகவே இவை நிறுத்தப்பட்டிருக்கின்றன, என்பாரும் உண்டு. எனக்கென்னமோ இது எ ல் ல ம் சரியென்று தோன்றவில்லை. கணவன் மனைவியர் தாம்பத்ய உறவு இருவர் உள்ளத்திலும் உருவாகும் அன்பை அடிப்படை யாகக் கொண்டது. அந்த உறவை சிற்பிகள் வடிக்கும் போது யாதொரு மனோ விகற்பமும் இல்லாமல்தான் வடித்திருக்க வேண்டும். அ ைத விகற்பமாக எண்ணு கிறவர்கள் உள்ளத்தில்தான் கோளாறே தவிர, சிற்ப வடிவங்களிலோ அதை வடித்த சிற்பிகளிடத்திலோ கோளாறு இருக்கவில்லை. எல்லாவற்றையும் க ைல அழகோடு காணும் கலை உள்ளம் படைத்தவர்களாக நாம் இருந்தாலே போதும், இத்தோடு என் கலைக்கோயில் யாத்திரையை முடித் துக்கொள்ள விரும்புகிறேன். இந்த யாத்திரையின் போது நான் ஆந்திர நாட்டுக் கோயில்களைக் காணவில்லை. வெப்பம்மிகுந்து விட்டதால் தமிழ்நாட்டிற்கே ஓடி வந்து விட்டேன், திரும்பவும் நல்ல அவகாசத்தோடு ஆந்திரப் பிரதேசம் சென்று திரும்பவேண்டும் என்ற எண்ணத்தோடு இந்திய நாட்டில் கோயில்களின் எண்ணிக்கைக் குறை வில்லை என்றாலும் அநேகமாக முக்கியமான க ைல க் கோயில்களுக்கு எல்லாம் உங்களை அழைத்துச் சென்று விட்டேன். வடநாட்டில் சில கோயில்கள் பிரம்மாண்ட மான அளவில் இருந்தாலும் பல கோயில்களில் நம் தமிழ் நாட்டுக் கோயில்களில் உள்ள சாந்நித்தியம் இல்லை என் றாலும் அங்குள்ள மக்களுடைய பக்தி நம்முடைய பக்திக்கு ஒரு சிறிதும் குறைந்ததல்ல. ஆசார அனுஷ்டானங்களிலே நாம் அவர்களை மிஞ்சி இருக்கலாம், என்றாலும் பக்தியில் நம்மைவிட அவர்களே விஞ்சி நிற்கிறார்கள் என்று தோன்றுகிறது. நமச்சிவாய' என்றும் மகாதேவ்' என்றும் உணர்ச்சியோடு அவர்கள் தொழுவதைப் பார்க்க வேண்டுமே! வைஷ்ணவர்களோ நம்மைச் சந்திக்கும் போது கூட ராதே ஷ்யாம்' என்றே கை கூப்புகிறார்கள். அவர்களுடைய உணர்ச்சி மயமான பக்தி நம் நெஞ்சைத் தொடுகிறது.