பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 லேமார்கடல் விடந்தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த! நீ செய்த சீலம் கண்டு கின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே! என்று. இப்படி அன்று நஞ்சை உண்டு தேவர்களையும் மற்ற வர்களையும் இறைவன் காவாவிட்டால், இவ்வுலக மக்கள் எல்லாம் எப்படி உயிர் பிழைத்திருப்பார்கள் என்றே கேட் கிறார். குற்றாலத்துப் புராணம் பாடிய திரிகூட ராஜப்ப கவிராயர். பாரோடும் விண்ணோர்கள் பறந்தோட, புரந்தரனார் பதிவிட்டு ஒடத் தேரோடும் கதிர் ஒட மதியோட, விதியோட திருமால் மேனி காரோடத் தொடர்ந்தோடும் கடல் விடத்தை பரமன் உண்டு காவாவிட்டால் ஆரோடு நீர் இருப்பீர்? எங்கோடி உயிர் பிழைப்பீர்? அறிவிலிர்காள்! என்பதுதான் அவரது கேள்வி. ஆம், நஞ்சைக் கண் டதும் தேவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் விஞ்சிய வராய் அல்லவா ஒடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அல்லவா எல்லோரையும் ஓட ஓட அடிக்கும் நஞ்சையே உண்டு உலகத்தையே காக்கிறார், நீலகண்டர். இந்த நீலகண்டரை நான் தமிழ்நாட்டுத் தலங்களில் பல இடங்களில் தேடினேன். நீலகண்டர் என்ற திருநாமத்தோடு ஒரு இடத்திலாவது அவர் என் கண்ணிற்கு அகப்படவே யில்லை. கடைசியாக ஆசாமியைக் கண்டுபிடித்தேன். அந்த அண்டை நாடான மைசூர் ராஜ்ஜியத்தில். அந்த