பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சோமநாதபுரத்துக் கேசவன் வேங்கடம் முதல் குமரிவரை நாம் யாத்திரை செய்தி போது திருப்புன்கூரில் நந்தியும், திருக்குறுங்குடியில் துவஜஸ்தம்பமும் சந்நிதியை விட்டு விலகியிருப்பதைக் கண்டிருக்கிறோம். அந்த ஹரிஜன பக்தன் நந்தனுக்காக, நந்தியை விலகச் சொல்லி சிவலோக நாதன் உத்தர விட்டிருக்கிறார். திருப்புன்கூரில் திருக்குறுங்குடியிலும் அதே போல நம்பாடுவான் என்ற பரம பாகவதனுக்கு. தரிசனம் தரவே அழகிய நம்பியும் துவஜஸ்தம்பத்தை. ஒதுக்கியிருக்கிறார். இ ந் த வேங்கடத்துக்கப்பால் செல்லும் rேத்திராடனத்தில் ஒரு தலத்தில் கோவில் மதிலுக்கும் வெளியே உள்ள கருட கம்பமே சந்நிதியை விட்டு விலகி நிற்கிறது. இது எப்படி நேர்ந்தது, இங்கும் யாராவது ஹரிஜன பக்தன் வந்திருந்தானா? என்று விசாரிக்க தோன்றும். அங்கும் ஒரு சுவையான கதை. கிடைக்கும். கேசவனுக்கு ஒரு கோயில் கட்டியிருக் கிறார்கள். ஜக்கனாச்சாரி என்ற சிற்பியின் மேற்பார்வையில் கோயில் கட்டும் திருப்பணி நடக்கிறது. கோயில் முழுவதும் ஒரே சிற்பவடிவங்கள். எல்லாம் அற்புதம் அற்புதமான வடிவங்களாக அமைக்கின்றார். குறை என்று சொல்லி எடுத்துக்காட்ட ஒன்றுகூட இல்லை. இவ்வளவு அழகாக குறையே இல்லாத கோயிலை தேவர்கள் பார்க்கின்றனர். அடடா! இத்தகையதொரு கோயில் இருக்க வேண்டியது. தேவர் உலகத்திலே அல்லவா. இதனை எப்படியாவது எடுத்து சென்று தேவர் உலகத்தை அழகு செய்து விட வேண்டும் என்று விரும்புகின்றனர் தேவர்கள். இதற்கு. பிறகுதான், அன்று வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் கல்யாண மண்டபத்தை அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்று பிரைட்டன் என்ற ஊரில் கலைக்கூடம் ஒன்று