பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 இக்கோயில் 1269-ம் வருஷம் ஹொய்சல மன்னரான மூன்றாம் நரசிம்மர் காலத்தில் அவரது உறவினரும் மந்திரி பிரதானியில் ஒருவராகவும் இருந்த சோமநாதர் என் பவரால் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலைச் சுற்றி ஒரு நகரும் நிர்மாணிக்கப்பட்டு, அந்த ஊருக்கு அவர் பெயரை யும் சேர்த்து சோமநாதபுரம் என்றும் பெயரிடப்பட்டிருக் கிறது. கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டிலே வைஷ்ணவ மதாச்சாரியரான இராமானுஜர், மைசூர் ராஜ்ஜியத்தில் தங்கியிருந்து வைஷ்ணவத்தை பரப்பியதின் காரணமாக அங்கே எழுந்த கோயில்களில் இதுவும் ஒன்று: அது காரணமாக இக்கோயில் கேசவன் கோயிலாகக் கட்டப்பட்டிருக்கிறது. இங்குள்ள கல்வெட்டுக்கள், இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மூர்த்திகளைப் பற்றி எல்லாம் விவர மாக கூறுகிறது. எல்லாவற்றையும்விட, விஷ்ணுவின் வராக அவதாரமே சிறப்பாக கூறப்பட்டிருக்கிறது. மூன்றாம் நரசிம்மன் வரை அப்பிரதேசத்தை ஆண்ட ஹொய்சல மன்னர்களின் வம்சாவழியும் விளக்கமாகத் தரப்பட்டிருக்கிறது. ஒரு கல்வெட்டில் ஹளபேடு என்னும் துவாரசமுத்திரத்தில் மந்திரி பிரதானிகளுடன் மூன்றாம் நரசிம்மன் கொலுவிருந்தபோது, சோமநாதன் அந்த மன்னனை வணங்கி சோமநாதபுரம் கேசவன் கோயிலுக்கு நிவந்தம் ஏற்படுத்தும்படி வேண்டினான் என்று குறித்திருக் கிறது. 1497-ல் ஏற்பட்ட ஒரு கல்வெட்டில் வசிட்ட முனிவர் இந்தப் பக்கத்திலே பர்னசாலை அமைத்திருந்த தாகவும் அந்தப் பர்னசாலையைச் சுற்றி அக்கிரகாரம் இருந்ததாகவும் அந்த அக்கிரகாரம் காலகதியில் அழிந்து போக அதனைத் திரும்பவும் உருவாக்க சாளுவ மன்னன் . இம்மடி நரசிங்கன் உத்தரவிட்டான் என்று கூறுகிறது. இந்த அக்ரகாரத்தில் வேதம் ஒதுவதில் வல்லவர்களான அந்தணர்கள் இருந்ததாகவும் அங்குள்ள கிளிகளும் நாகண வாய்ப்புட்களும்கூட மீமாம்சம், தர்க்கம், வியாகரணம்