பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முன்னுரை தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் 'வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தலவரலாற்றுக் கட்டுரைத் தொடர் முடிவுறுகிற சமயத்தில், தமிழ் அன்பர் பலர் தமிழ்நாட்டுத் தலங்களைப்பற்றி எழுதியது போலவே வடநாட்டுத் தலங்களைப் பற்றியும் எழுத வேண்டும். அங்கெல்லாம் சென்றால், என்ன என்ன பார்க்க வேண்டும் என்பதை எல்லாம் சொல்வாரில்லை. ஆதலால் அதையும் தாங்களே எழுத வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள். நான் இதற்கு முன் டில்லிக்கும் ஆக்ராவிற்கும் இரண்டு முறை சென்றிருக்கிறேன். சிம்லாவிற்கும் அதற்கு வடக்கேயுள்ள நார்க்கண்டாவரையும் சென்று திரும்பியிருக்கிறேன். பம்பாய், புனா முதலிய நகரங்களுக்கும் இரண்டு மூன்று தடவை சென்றதுண்டு. ஆக்ராவுக்கு கிழக்கே சென்றதில்லை. அத்தோடு கட்டுரை எழுதும் அளவிற்கு செய்திகளும் சேகரித்ததில்லை. படங் களும் எடுத்ததில்லை. ஆதலால் அன்பர்களது ஆசிபெற்று என் நெடுநாளைய ஆசையைப் பூர்த்தி செய்ய சென்ற மார்ச்சு மாதத்தில், எனது கோவை நண்பர்கள் இருவருடன் எனது வடநாட்டு யாத்திரையைக் காரிலேயே துவக்கினேன். கிட்டதட்ட இரண்டரை மாதகாலம்,