பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

105

என்னும் திருக்குறட் பொருளை அரைமணி நேரம் விளக்கியிருப்பார்கள். இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வியவர் - மனத்தில் தேய்த்துத் தேய்த்து உரசி உரசி - சரியா தவறா என்று இழைத்து - அஃதாவது மொத்தமாக இல்லாமல் மெல்லியதாக ஆகும் வரை இழைத்து அதைச் சரி என்று மனத்திலே உணர்கின்ற - போய்ப் போய்த் தேடி அறிவைத் தேடுகின்ற அறிவினார்.

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் பிழையாகத் தம் மனத்துள்ளே உணர்ந்தாலும் அந்தப் பிழையானவற்றை வெளியே வாய்திறந்து சொல்லமாட்டார்கள் - என்று பற்பல கூறி விளக்கித் திருக்குறள் அறிவுக்குப் பொருத்தமானவற்றை எந்த அறிஞனும் இருந்து சொல்லாத உயர்நிலையில் இருந்து அறிவைக் கூறுவதாகக் கூறினார்கள்.

பலர் இன்று பொதுவுடைமை பேசிக்கொண்டு தொழிலாளர்க்குத் தலைவராய் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள்; அவர்கள் வெறும் போலித்தலைவர்களே; தொழிலுக்குத் தலைவராக இருந்து தொழிலாளர்க்குத் தலைவராய் அமர வேண்டிய உண்மையன தலைவர் ஒருவரும் இலர் என்று போலித் தலைவர்களைக் கண்டித் தார்கள்.

தமிழக விடுதலைக்குப் பெரியாரையே இனியும் நம்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்றும்; அவர் ஆற்ற வேண்டிய பணிகளை இதுநாள் வரை ஆற்றிவிட்டாரென்றும்; அவர் காட்டிய வழியில் நாம் மேலே ஒருபடி சென்று அவர் செய்யாதவற்றைச் செய்ய வேண்டும் என்றும்; கலைஞர் மாநிலத் தன்னாட்சிகோரினாலும் அவர் உள்மனத்தில் தமிழக விடுதலை உணர்வுதான் இருக்கிறதென்றும் கூறினார்கள்.

விடுதலையடைந்த பல நாடுகளின் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டு பலர் பலவாறு சொல்லிக்கொண்டு நம் மக்கள் ஒத்துழைப்பார்களா என்று தயங்குகின்றார்கள்; மயங்குகின்றார்கள். பிரெஞ்சுப்புரட்சி ஏறத்தாழ 400 பேர்களால் தான் முன்னின்று நடத்தப் பெற்றது. மக்கள் தக்க நேரத்தில் அவர்களாகவேவந்து சேர்ந்து கொண்டார்கள். எனவே மக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களை எந்தநேரத்திலும் இழுத்துக் கொள்ளலாம். வங்காளத்தில் நடந்த விடுதலைப் புரட்சியில் இலக்கக் கணக்கில் மடிந்துள்ளார்களே என்கிறார்கள் அங்கு மடிந்தால் இங்கும் மடிய வேண்டுமா என்ன? அப்படியே செத்தாலும்தான் என்ன கெட்டுப் போகிறது. இப்போதுள்ள நிலை வாழ்ந்து