பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

107

பதின்மர் பரிந்துரைக்க வேண்டுமென்றும், பதின்மர் கொண்ட இவ்வாய அமைப்பு 9 க்கு மேற்படின் இரு வாரியங்களாகப் பிரியும் என்றும் இதே போல் கொற்ற அமைப்பும் அமைக்கப்பெறும் என்றும், இக்கொற்ற, வாரிய, ஆய அமைப்புகள் வேந்தத்தின் கட்டளைப்படி நடக்குமென்றும் கூறினார்கள்.

இந்நான்கு அமைப்புகளும் வேண்டுகோள் காலமான மே 1975 வரை தொடர்புடைய அனைவர்க்கும் மாதந்தோறும் நேரிலும், மடல்வழியும் (மொழி , இனவிடுதலை ஆவதற்குத் தாம் சொல்வது போல் செய்யுமாறும், தமிழக விடுதலை தருமாறும்) கோரிக்கைகள் விடுத்தவண்ணமிருக்கும். பயனளிக்காவிடத்துப் போராட்டக் காலமான மே 1978 வரைப் பல்வகையான போராட்டங்களை அமைதியாக நடத்தும் அஃதும் பயனளிக்காவிடத்து சூன் 1978 முதல் எல்லா அமைப்புகளும் வன்முறையில் ஈடுபடும். கோரிக்கைக்கிணங்காத பொது அமைப்புகளும் நடுவணரசு நில , நீர், வான் அலுவலகங்களும் தீவைத்துக் கொளுத்தவும் தக்கன கொண்டு தகர்க்கவும் பெறும் என்பதைப் பாவலரேறு அவர்கள் மிகவும் அழுத்தந்திருத்தமாக முழு உணர்வோடு வெளியில் நிற்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் கேட்குமாறு சொன்னார்கள். ஒலிபெருக்கியில் இறுதியாக விடுதலை முழக்கங்களை மறவர்கள் எழுப்ப மாநாடு இனிதே முடிவுற்றது. எனினும் மறுநாள் பாவலரேறு அவர்கள் திருச்சியினின்று வெளியேறும் வரையிலும் நடுவணரசு ஒற்றர்களின் தொடரும் பணி முடிவுறவில்லை.

தீர்மானங்கள்

திருச்சிராப்பள்ளித் தேவர் மன்றத்தில் 10.6.72, 11.6.72 ஆம் நாட்களில் கூடிய தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டில் நிறைவேற்றுப் பெற்ற தீர்மானங்கள்;

தீர்மானம் -1

(10-5-72 அன்று பிற்பகல் நடைபெற்ற குமுகாய மாநாட்டின் (Social conference) இறுதியில் நிறைவேற்றப் பெற்றது.)

குறிக்கோள் : தமிழ்மொழி, குமுகாய விடுதலை.

இக் குறிக்கோளின் அடிப்படையில் தமிழகத்தின் அரசுச்சார்பில் உள்ள ஆட்சி, அலுவல், கல்வி, தொழில் எனும் நான்கு துறைகளிலும்; தனியார் சார்பிலுள்ள பொது வாழ்வியல், வாணிகம்,