பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

வேண்டும் விடுதலை

நிலையிலே இருக்கின்ற பலவகையான சூழல்களையும் இழிவுகளையும் எடுத்து உங்கள் முன்னே வைத்ததற்கும் ஒருசில வகையிலே உங்கட்கு விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டு தீர்மானத்தை இறுதியாக நிறைவேற்ற விரும்புகின்றேன். அருள்களிைந்து மிக அமைதியாக இருந்து இந்தக் கருத்துகளைச் செவிமடுக்கக் கேட்டுக்கொள்கின்றேன்.

பெரியோர்களே! இந்தத் தமிழ்க் குமுகாயம் என்று சொல்லிக் கொள்கின்றோமே, இப்படி ஒரு குமுகாயம் இருக்கின்றதா என்ற நிலையை யாரும் ஒப்புக் கொள்ளவில்லை, தமிழர்கள் என்கிற நிலை, ஏதோ ஓர் எழுத்திலே சொல்லப் பெறுகின்ற-வரலாற்றில் பொத்தகத்தில் - குறிக்கப் பெறுகின்ற நிலையாக இருந்து வருகிறதே தவிர, நம்முடைய உள்ளங்களில் வெளிப்படுகின்ற நிலையில் இல்லை. இம்மாநாட்டுக்குப் பலர் வந்திருக்கிறோம்; பல ஆண்டுகளாக தமிழுணர்ச்சி பெற்று வந்திருக்கிறோம். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் தமிழ், தமிழன் என்கின்ற உணர்வுகள் இருக்கின்றனவா என்றால், இருக்கும் என்பதில் ஐயப்பாடுதான். இங்கு வந்திருப்பவருள் யாராவது ஒருவரைத் தனியறையிலே அழைத்துச் சாதி, மதம் பற்றிக் கேட்டால் சொல்லத் தயங்குபவரும் ஏன் கேட்கின்றீர்கள் என்று எதிர்த்துக் கேட்பவரும் இருப்பர் என்று கருத முடியவில்லை. பெரியார் 50, 60 ஆண்டுக் காலமாகப் பேசிவருகிறார். அவருடன் இருந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நாய் கூட அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க நினைக்காது. அப்படிப் பேசியும். வாழ்வில்-நடைமுறையில் அந்தக் கருத்துகளை ஏற்றுக்கொண்டோமா?

இப்போது பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் நாட்கள். மாணவர்களைச் சேர்க்குங்கால் சாதி என்ன என்று கேட்கின்றார்கள். 'தமிழ்நாடு' என்று நாட்டுப் பெயரை மாற்றிவிட்டோம்; ஆனால் இனப்பெயரை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. மதம் என்ன என்று கேட்கின்றார்கள்? இந்து என்று கொட்டை எழுத்துகளில் எழுதுகிறோம். இந்து என்றால் என்ன பொருள்? நமக்குத் தெரியாது. தாய் தந்தையர் சொன்னார்கள், 'இந்து' என்று குறித்து விடுகிறோம். படிக்கும் ஒரு மாணவனிடம் உன் மதம் என்ன என்று ஏன் கேட்க வேண்டும்? 'மதம் என்ன' ? என்றால் என்ன பொருள்? எந்தக் கடவுளைக் கும்பிடுகிறாய் என்று தானே பொருள்? இதை எந்த இராசாசியோ, வாரியாரோ மறுத்துக் கூறமுடியுமா? ஒரு மாணவனிடம் போய் எந்தக் கடவுளைக் கும்பிடுகிறாய் என்று ஏன் கேட்க வேண்டும்? அவன் கும்பிடுகிறான்