பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

173

பதினாறாண்டுகளாக நூற்றுக்கணக்கான தமிழுணர்வுப் பாடல்களையும், தமிழக விடுதலைப் பாடல்களையும் கருத்துக ளையும் ஆயிரக்கணக்கானப் பக்கங்கள் எழுதியும் பல நூற்றுக் கணக்கான கூட்டங்களில் பேசியும் வந்த என்னையே நாங்கள் சிறையிலிருந்த ஒரு சிலநாட்களுக்குள் அங்கிருந்த மறவர்களில் சிலர் ஐயுற்றுப் புறக்கணிக்கும்படியாக, அவர் நடந்துகொண்டது எனக்குப் பெரிதும் வியப்பளித்தது. ஆயினும், இருபது ஆண்டுகள் ஒரு கட்சியுடன் பழகி வளர்ந்து ஒருசில நாட்களில் நம்மைத் தெரிந்துகொண்டது போல் வந்து நம்முடன் இணைந்து ஓரிரு வினைப்பாடுகளில் பங்கு கொண்ட அவரின் உணர்ச்சி நிலையை விட நம் மறவர்கள் சிலரின் பதினாறாண்டுப் பழக்கத்தின் முடிவு எனக்குப் பெரிதும் அதிர்ச்சியுறும்படி செய்யவில்லை. அரசியல் நாடகக் காட்சிகளுக்கு முன் என் மெய்யுணர்வு சான்ற உண்மை நடைமுறைகள் பயனற்றுப் போனது. எனக்கு மேலும் சில படிப்பினைகளையும், உறுதிப்பாடுகளையும் தந்தது. (அடியாரின் சிறை நடவடிக்கைகளையும், அவற்றுக்குரிய உள்முக நோக்கங்களையும் இங்கு விளக்குவதால் எந்தப் பயனும் விளைந்துவிடப் போவதில்லை. தேவையானவிடத்து, அவற்றையும் விளக்க வேண்டிய அழுத்தம் வரும்பொழுது விளக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் ஒரு தீக்கனவுப் போல் மறந்துபோகவே முயற்சி செய்கின்றேன்.

மொத்தத்தில் சிறையிலிருந்த நாற்பத்தொன்பது நாட்களில் இறுதிப் பதினோரு நாட்களாக என் நடவடிக்கைகளில் நிறைவுறாதவர்களாகவும், அடியார்பாலும் அவர் இருந்த கட்சியின் பாலும் ஏற்கனவே ஓரளவு ஈடுபாடும், இக்கால் இணக்கமும் எற்படுத்திக் கொண்டவர்களாக மாறியுள்ள ஒரு சிலர். இனிமேல் திரு. அடியார் அவர்கள் அவர்க்களுக்காகிலும் நம்பிக்கையுடையவர்களாகவும், நன்றியுடையவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் எந்த ஒரு இயக்கமும் வலுப்பெற வேண்டுமானால் அதன் கொள்கைகளில் முதற்கண், ஐயமற்ற தெளிவுவேண்டும். அடுத்து, அவ்வியக்க அமைப்பாளர்களிடம் நம்பிக்கையுடனும் நன்றியுணர்ச்சியுடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் இயக்கத்தின் மேனிலை நடைமுறைகளுக்குக் கீழ்ப்படியும் கொள்கைக் கடைப்பிடியும் வேண்டும். ஒருவரைத் தலைவராகவோ, பொதுச்செயலாளராகவோ ஏற்றுக்கொண்டுவிட்ட பின்னர், அவரின் கொள்கை நடவடிக்கைக நடவடிக்கைகளில் ஐயப்பாடு கொள்வதும், அவரைப் பற்றிக் குறைவாக