பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

வேண்டும் விடுதலை


 
தமிழ்த்தேசிய இனவுணர்வாளர்கள்
ஒன்றுசேரவேண்டும்!


ந்தியாவில் அடுத்துவரும் காலம் தேசிய இனவிடுதலைப் போராட்டக் காலமாகும். இதை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

பஞ்சாபில் இறுதியாக அரசு மேற்கொண்ட முயற்சிகள் எந்த ஓர் ஆளும் பிரிவும் இயல்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளே. எனவே அதுபற்றி யாரும் அச்சமடையவோ கலக்கமடையவோ தேவையில்லை. ஆனால் இப்போராட்டக் கலவரங்களுக்குப் பின்னர் படிநிலை வளர்ச்சியுறும் (பரிணாமமுறும்) மக்கள் மனவெழுச்சிகளுக்கு நாம் முகாமை (முக்கியத்துவம்) அளிக்க வேண்டும்.

ஒரு நாடு எவ்வளவு முகாமையானதோ அவ்வளவு முகாமையானவர்கள் அதன் மக்கள். இனி, மக்களில் ஆளும் பிரிவினராகிய ஆட்சியாளர்க்குச் சார்பாக இயங்குபவர்கள் எவ்வளவு மதிக்கத் தகுந்தவர்களோ, அவ்வளவு மதிக்கத் தகுந்தவர்களே, அவர்களுக்கு எதிரானவர்களும். குடியரசமைப்பின் நேர்மையான அரசியல் இலக்கணம் இது. எனவே, ஆட்சியாளர்க்கு எதிராக மக்களில் ஒரு பகுதியினர் கிளர்ந்து எழுகிறார்களென்றால், அக் கிளர்ச்சியினை அடக்கியொடுக்க அரசினர் முனைவது குடியரசு அமைப்பு முறைப்படி அறியாமையிலும் அறியாமையாகும்.