பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

239

வேண்டாம். ஆட்சியாளரிடம் உள்ள அக் கருவிகள் மக்கள் கைகளுக்குவர நெடுநாள் ஆகாது! ஒரேயொரு கால எல்லைதான் தேவை! அஃது எந்தக் காலம் என்று யாராலும் வரையறுக்க முடியாது. ஊர் நலனுக்கென்று தேக்கி வைக்கப் பெறுகின்ற அணைநீர்! அவ்வணையின் கரை உடைக்கப்படும்பொழுது, அஃது ஊரையே அழித்துவிடும் என்பதை எப்பொழுதும் ஆளுமைக்காரர்கள் உணர்ந்து கொள்வதை விடப் போராட்டக்காரர்கள் உணர்ந்திருப்பார்கள் என்பதையேனும் ஆட்சியில் உள்ள இராசீவ்காந்திகளும், இராமச்சந்திரன்களும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்!

புரட்சி வாழ்க! புதுமை பொலிக!

வறட்சி நீங்குக! வல்லாண்மை ஒழிக!

-தமிழ்நிலம், இதழ் எண். 75, அத்தோபர், 1986