பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

341

"தேசிய இன விடுதலைப் போராட்டத்தைப் புறக்கணித்து விட்டு, வகுப்புச் சிக்கலை (வர்க்கப் பிரச்சினையை - அஃதாவது ஏழை, பணக்காரன் சிக்கலை) முன்னிலைப்படுத்துதல், வகுப்பு(வர்க்க)ப் புரட்சியையே இழிவுபடுத்துவதாகும்".

மார்க்சு 'Vulgarization of class — struggle'
பக்.39, Class and Nations.)

"பிரிந்து போகும் உரிமையுள்ள முழக்கமே தேசிய இன விடுதலைக்கான முழக்கம். அஃதில்லாமல் பிரிந்துபோகும் உரிமையற்ற தன்னாட்சி முழக்கம் தேசிய இன நசுக்கலுக்கான முழக்கமே. இது பொய்யான கோரிக்கையும் ஆகும். இது நிகரமைக்கு(சோசலிசத்திற்கு)ச் செய்யும் இரண்டகமுமாகும்" என்பது இலெனின் தரும் விளக்கமாகும்.

இலெனின் ‘’The socialist revolution and the right of
nation to self-determination)

“அரசு என்பது ஒரு வகுப்பு(வர்க்கம்) (இந்தியாவைப் பொறுத்த அளவில் இன நிலையில் பார்ப்பனீயமும், பொருள் நிலையில் முதலாளியமும்) இன்னொரு வகுப்பின் (வர்க்கத்தின்) ஆட்சியை நிலைப்படுத்தும் கருவி. தனி உடைமை இருக்கின்ற வரை மக்கள் நாயகக் குடியரசு (Democratic Republic) என்று அழைக்கப்படும் அரசு என்ற கருவியும், முதலாளிகள் பாட்டாளிகளை நசுக்கப் பயன்படுத்தும் கருவிதான்” என்றும் இலெனின் கருத்தறிவிக்கிறார். மேலும் அவர் இன்னோர் இடத்தில்,

“தன்னுரிமையை அஃதாவது பிரிந்து செல்லும் உரிமையை ஆதரிப்பவர்களைப் பிரிவினைவாதிகள் -பிரிவினைக்கு ஊக்குவிப்பவர்கள் என்று குற்றம் சாட்டுவது முட்டாள்தனமானது; நயவஞ்சகமானது. மணவிலக்கு உரிமையை ஆதரிப்பதால் குடும்பத்தைக் குலைக்க ஊக்குவிப்பதற்குச் சமம் என்னும் முட்டாள்தனமான — பாசாங்குத்தனமான குற்றச்சாட்டு போன்றதாகும்”

இலெனின் "Selections from V.I. Lenin
and J.V. Stalin on National Colonial Question — ” பக் 22
– தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பக். 5 )

மேலும் கூட்டுச் சேரா நாடுகளின் இரண்டாவது மாநாடு 1964ஆம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்றபோது, "தங்கள் அரசியல் உரிமையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள ஒவ்வொரு தேசிய