பக்கம்:வேத வித்து.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முர்த்தி கழுத்துச் சங்கிலியைத் தொட்டுப் பார்த்தான். அம்மாவின் நினைவு தோன்ற, கண் கலங்கியபடி ஐயன்கடைத் தெரு நோக்கிப் புறப்பட்டான். மெயின் ரோடைப் பிடிக்க குறுக்குச் சந்தில் புகுந்து நடந்தபோது எதிரில் காசி யாத்திரை போகும் கலியாணக் கும்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. மாப்பிள்ளையைச் சூழ்ந்து ஒரு பெரிய கூட்டம். நாதசுரக்காரர் வாத்தியத்தை தாராளமாய் வீசி வாசிக்க முடியாத அளவுக்குக் குறுகலான சந்து. பரதேசிக்கோல மாப்பிள்ளைக்கு குடை பிடித்துக் கொண்டு கின்ற கிட்டா மீது மூர்த்தியின் பார்வை விழுந்தது. 'அடl இவன் எப்படி வந்தான் இங்கே?' என்ற ஆச்சரியத்துடன் அவனை அணுகி கிட்டா' என்று கூப்பிட்டான் மூர்த்தி. மூர்த்தியைக் கண்டதும் கிடோவுக்குச் சந்தோஷம் தாங்க ရ္ဟိရ္ဟိမ္ဟု -ಡಿ-' என்று ஓடி வந்து மூர்த்தியைக் கட்டிக் 安厝&”一尊”67 'மூர்த்தி கீ இன்னும் இந்த ஊர்லதான் இருக்கயா? மத்தியானத்துக்கு மேல உன்னைத் தேடிப் பார்க்கணும்னு கினைச்சுண்டிருந்தேன். தெய்வமாப் பார்த்து உன்னை இங்கே கொண்டு வந்து விட்டிருக்கு' என்றான் கிட்டா. 'மாப்பிள்ளை யாருடா? உனக்கு என்ன உறவு' "எனக்கு மாமா பிள்ளை. டாக்டருக்குப் படிக்கிறான். அதோ உயரமா வராறே, அவர்தான் எங்க மாமா. வெள்ளிக் கடை கிட்டப்பான்னா தஞ்சாவூர்ல தெரியாதவா இருக்கமாட்டா. ரொம்பத் தமாஷாப் பேசுவார். வேதம் படிக்கிறவாளைக் கண்டா ரொம்புப் பிடிக்கும். மத்தியானமா உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீ இப்ப என் கூட வா. கலியாண வீட்லயே சாப்பிடலாம். மற்றதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்' என்றான் கிட்டா. "உனக்குத்தான் மாமா உறவு. எனக்கும் இந்தக் கலியாணத்துக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு சங்கிோஜமா இருக்குடா. நான் வர லே. என்னை விட்டுரு" என்றான் மூர்த்தி.

98

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/100&oldid=1281634" இலிருந்து மீள்விக்கப்பட்டது