பக்கம்:வேத வித்து.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"வேதத்தை விட்டுட்டே கனபாடிகள் ேப ச் ைச த் தட்டிட்டே ரெண்டு விஷயம் போச்சு. இன்னும் ஒண்ணுதான் பாக்கி. கழுத்துச் சங்கிலியை விட்டு வெச்சிருக்கேI' 'இப்ப அதையும் வித்துடலாம்னுதான் கடைத் தெருவுக்குப் போயிண்டிருந்தேன். நடு வழியில உன்னைப் பார்த்தேன்...' 'சந்தியாவந்தனம் ஒழுங்காப் பண் றயா? தினம் ஒரு ஆவ்ருத்தியாவது வேதம் சொல்றயா?” * 'சத்திரத்துக்குப் பக்கத்துலயே புது ஆறு ஒடறது! காவேரித் தண்ணிதான். ஸ்கானத்துக்கு அங்க போயிடுவேன். ஜபதபும் எல்லாம் ஆனந்தா லாட்ஜ்ல. வைதிகாளுக்கு ஏத்த மாதிரி வசதியான இடம். மனஸ்லதான் கிம்மதி இல்லே.' "எங்க தங்கியிருக்கே?' 'சத்திரத்துல. என்னை வெள்ளத்துலேந்து காப்பாத்தி னாளே, அந்தப் பெண்ணோடl' "அந்தக் கழைக்கூத்தாடிப் பெண்ணோடயா?' பாயசத்தி லிருந்த முந்திரியை விரலால் கெருடினான் கிட்டா. "ஆமாம்; அவளைப் பார்த்து நன்றி சொல்லிட்டுப் போலாம்னுதான் இங்க வந்தேன். குறள் படிச்சுட்டா மட்டும் போதுமா? நன்றி உணர்வை மனஸ்லயே வச்சிண்டிருக்கக் கூடாது. வெளிப்படையா வாய்விட்டுச் சொல்லணும். சமயம் வரப்போ காரியத்துலயும் காட்டனும். இங்க வந்தப்புறம், அவளோட பழகினப்புறம் அவளை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவளும் ரொம்பப் பிரியமா இருக்கா!' "ம்... ஆசாரம் கெடாம இருந்தா சரி, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப்போற?" 'அதான் தெரியலே. ஒரே குழப்பமா இருக்கு. குடுமியை எடுத்துடச் சொல்றா. எனக்குதான் இஷ்டமில்லே. தட்டிக் கழிச்சுண்டே இருக்கேன். வேதத்தைப் பாதியில விட்டுடவும் மனசு வரலே. அதைத் தொடர்ந்து படிக்கணும்னு ஒரு வேகமே வந்திருக்கு. இன்னைக்கு அப்பா கடுதாசியைப் படிச்சப்புறம் அந்த வேகம் ஒரு வெறியாவே மாறியிருக்கு." 105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/108&oldid=918599" இலிருந்து மீள்விக்கப்பட்டது