பக்கம்:வேத வித்து.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முர்த்தியைப் பிரிந்த சோகத்தில் சங்கர கனபாடிகள் அமைதி இழந்து தூக்கமிழந்து அடிக்கடி படுக்கையில் உட்கார்ந்து 'முர்த்தி, மூர்த்தி' என்று துயரம் தோய்ந்த குரலில் முனகிக் கொண்டிருந்தார். துயரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த தவிப்பில், தள்ளாமை மேலிட்டு, தளர்ந்து, உலர்ந்த திராட்சை போன்ற சுருக்கங்களுடன் இளைத்துப் போனார். அன்று அவர் ராமாயண பாராயணம் செய்து கொண் டிருந்தபோது, ராமனின் பிரிவாற்றாமையால் வாடிக்கொண்டிருந்த தசரதனின் புத்திர சோகத்தை வால்மீகி வர்ணித்திருந்த வார்த்தைகள் கண்ணிர் உகுக்கச் செய்தன. மேலும் படிக்க முடியாமல் கண்ணிர் திரையிட்டபோது விம்மி வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டார். இச்சமயம் அதோ, கிட்டா வந்துட்டானே!' என்ற கயலாவின் உற்சாகக் குரல் கேட்டதும், கனபாடிகள் கிட்டா வரும் திசையை நோக்கி 'வா கிட்டா, எல்லாரும் கூேடிமம்தானே? முர்த்தியைப் பார்த்தயா?' என்று ஆவல் பொங்கக் கேட்டார். 'போன முதல் நாளே பார்த்துட்டேன். மாப்பிள்ளை காசி யாத்திரை போறப்ப அவனே குறுக்கே வந்து சேர்ந்தான்! அப்புறம் காலு நாளும் என்னோடதான் இருந்தான். 118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/123&oldid=918632" இலிருந்து மீள்விக்கப்பட்டது