பக்கம்:வேத வித்து.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கிட்டப்பாவையே கேட்டுப் பாருங்க; நான் ரசம் பண்ணா டம்ளர்ல வாங்கிக் குடிச்சுட்டு உம்ம பேர் ஆனந்த ராவ் இல்லே, பிரம்மானங்த ராவ்னு சொல்லுவார்' என்றார் ராவ்ஜி. "கிட்டப்பா, எப்பவுமே தமாஷாத்தான் பேசுவார். மூர்த்தி! இவறை உள்ளே அழைச்சிண்டு போ. பாகீரதியைப் போய்ப் பார் முதல்ல" என்றார். அவர்களிருவரும் உள்ளே போனதும் கவரைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார். கனபாடிகள் பாகீரதியைப் போய்ப் பார்' என்று சொன்னதும் மு ர் த் தி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அவள் முகத்தில் எப்படி விழிப்பது? என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது?’ என்று யோசித்தபடியே பின் பக்கம் போனபோது, அங்கே சொர்ண விக்கிரகம் போல் கின்று கொண்டிருந்த பாகீரதி மூர்த்தியைக் கண்டதும் மகிழ்ச்சிக் குரலில் 'வா, மூர்த்தி செளக்கியமா? கிட்டா உன்னைப் பத்தி எல்லாம் சொன்னான்' என்றாள். - 184

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/139&oldid=918666" இலிருந்து மீள்விக்கப்பட்டது